• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-09 11:17:32    
ஹுவாங்ஷான் மலையின் அதிசயமான தேவதாரு மரங்கள்

cri

மலையின் நீளம், பல நூறு மீட்டர் ஆகும். இதற்கு, ஆயிரக் கணக்கான மலைமுகடுகள் உண்டு. இங்கு, அதிகமான தேவதாரு மரங்கள் ஊள்ளன.

ஹுவாங்ஷான் தேவதாரு மரங்கள், கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டருக்கு மேலான உயரமான மலைகளில் வளர்கின்றன. அவை, கற்பாறைகளின் இடுக்கில் உறுதியாக வளர்த்து வருகின்றன.

ஊசி போன்ற இம்மரங்களின் இலைகள், அடர்த்தியாகவும் குறுகியதாகவும் இருக்கின்றன. ஹுவான்ஷான் மலையின் வடக்குபுற சரிவுகளில் 1500 முதல் 1700 மீட்டர் வரை உயரமான இடங்களிலும், தெற்கு சரிவுகளில் 1000 முதல் 1600 மீட்டர் வரை உயரமான இடங்களிலும் இம்மரங்கள் வளர்கின்றன. இங்குள்ள இயற்கைச் சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதால், ஹுவாங்ஷான் தேவதாரு மரங்கள், பல்வேறு வடிவங்களைக் கொள்கின்றன.

பல மரங்கள் ஒரு பக்கம் மட்டும் செழுமையாக வளர்வது, இம்மரங்களின் வேறு ஒரு சிறப்பாகும். இவற்றின் வடிவங்கள், அழகாகவும், சிறப்பாகவும், இருக்கின்றன. ஆனால், இவற்றின் வளரும் சுற்றுச்சூழல் மிகவும் கடினமாக இருக்கிறது. அதனால், அவை வளரும் வேகம், குறைவாக இருக்கிறது.