மே 28ம் நாள் காலை உணவு சாப்பிட்டுவிட்டு முன்தின் மலையின் சுற்றுலா இடத்திற்கு முணுகப்பட்டு பி. கண்ணன் சேகரும் தி. கலையரசியும் புறப்பட்டனர். அங்கே அவர்கள் தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டனர். அங்கே பரவிய தேயிலைப் பண்பாடும், தேயிலைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்தியத் தேயிலைப் பண்பாடும் கண்ணன்சேகரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. 2005ம் ஆண்டில் உலக தேயிலையளவில் இந்தியா முதல் இடம் வகித்த செய்தியை கேட்டதுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
பிற்பகல் பண்டா வளர்ப்பு மண்டலத்தில் அவர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். பண்டா குட்டி வளர்ப்பு மையத்தையும் இயற்கையோடு இணைந்து இன்பமாக வாழ்கின்ற பண்டாக்குட்டிகளையும் கண்டுரசித்தனர். பின் சில நூறு ஆண்டு பழமை வாய்ந்த வரலாறு கொண்ட ஷான்லீ நகரை பார்வையிட்டனர். மரங்களால் கட்டியமைக்கப்பட்ட வீடுகள் சாலையின் இருப்பக்கங்கலில் வரிசையாக உள்ளன.
மக்கள் விடுமுறை கழிக்க இந்த சிறிய நகருக்கு வருகை தருகின்றனர். உள்ளூர் தனிச்சிறப்புமிக்க வேளாண் உற்பத்தி பொருட்களை சமைத்து விற்பனை செய்தமை தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு நாளில் மூன்று சுற்றுலா இடங்களை பார்வையிட்ட களைப்பு இருந்தாலும் அன்பான பாண்டாக்களையும் அருமையான உயிரின சுற்றுபாதுகாப்பு இடங்களையும் நினைக்கும் போது களைப்பு போயிற்று.
|