• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-28 09:34:51    
சிச்சுவான் தலைநகரிலிருந்து முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்

cri

சீனப்பயண‌த்தின் தொடர்ச்சியாக மே‍‍ 27ஆம் மாலை சிச்சுவான் தலைநகரில் அமைந்துள்ள மூன்று லட்சம் சதுரமீட்டர் அளவில் அமைந்துள்ள வரலாற்று புகழ் மிக்க அருங்காட்சியத்தை பார்த்தேன். என்னுடன் தலைவர் தி.கலையரசி அவர்கள் வந்ததால், பல விளக்கங்களை அவர் தெரிவித்தது பயன்மிக்கதாய் இருந்தது. இந்த அருங்காட்சியைப் பார்த்தால் பண்டைய மக்களின் வாழ்க்கை நிலையை தெரிந்துகொள்ள‌ வாய்ப்பு உண்டு. மூவாயிரம் ஆண்களுக்கு முந்தைய சீன சுச்சுவான் வரலாற்றை நினைவு படுத்தும் இந்த அருங்காட்சியகத்தில், பழங்கால‌ மாதிரி கிராமம் ஒன்று தத்துரூபமாக அமைக்கபட்டு, அன்றைய மக்கள் வாழ்ந்த எளிமையான சூழலை நினைவுபடுத்துகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் வளர்ச்சி கண்டிருப்பதை அருங்காட்சியத்தின் காட்சிப்பொருட்கள் சுட்டிக்காட்டுகிறது. ஆபரணங்கள். பாத்திரங்கள்,விவசாய‌கருவிகள், என பலவிதமான பொருட்களை அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அக்காலத்திலேயே தங்க ஆபர‌ணங்கள் தயாரிப்பதில் சிச்சுவான் மக்கள் தலை சிறந்தவர்களாக விளங்கி இருக்கின்றனர். அதே போல் தேயிலை பயிர் தொழிலும் சிறப்பாக செய்து இன்றுவரை தேயிலைக்கு பெயர் பெற்ற பிரதேசமாக சிச்சுவான் இருப்பதை அறிகிறேன்,

அருங்காட்சியகத்தின் இன்னொரு மையமாக பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பலவித மிருகங்களின் ஆயிரங்கணக்கான‌ எலும்புகள், பல ஆயிரம் ஆண்டுகளை தாண்டி கல்லாகிப் போன மரங்கள் என தனியாக வைத்து பராமரித்து பாதுகாத்து வருவது சிறப்பானதாகும். இன்று காண கிடைக்காத அபூர்வ மருத்துவ மரங்கள் இவை என்றும், இந்த மர‌த்தின் ஒரு கண மீட்டர் அளவே லட்சங்கணக்கில் விற்கப்பட்டதாக தலைவர் கலையரசி கூற வியந்து போனேன். மாரடைப்பு நோயை குணப்படுத்தும் மருந்துகள் இந்த மரங்கள் மூலம் பண்டைய காலத்தில் செய்யப்பட்டுள்ளது. கல்லாகிப்போன மரங்கள் பூமிக்கடியில் இருந்ததை அப்படியே மக்களின் பார்வைக்கு வைத்து கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது. இதே போல யாணைத் தந்தங்கள் மிகப்பெரிய அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை கண்டுகளித்தேன். இன்னொரு அதிசய செய்தியாக சூரியப் பறவை அக்காலத்தில் இருந்ததாக இந்த அருங்காட்சியகம் வரலாறு பதிவை தெரிவிக்கின்றது. அருங்காட்சியகத்தில் நுழையும் முன்பே சூரியப்பறவை வடிவில் பெரிய உறுவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலூம் இந்த அருங்காட்சியகத்தில் 4டி திரைப்படமும் காட்டப்படுவதாகச் செய்தி.

அன்றைய தினமே மாலை 6.00 மணிக்கு சிச்சுவான் மாநில அரசு ஏற்பாட்டில் நேயர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் சிறப்பு பரிசு பெற்ற 10நேயர்களுடன் சீன வானொலி நிலையத்தின் இயக்குனரும், சிச்சுவான் மாநில விளம்பரத்துறை அமைச்சரும், சிச்சுவான் சுற்றுலாத்துறைத் தலைவரும் மற்ரும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.