மே 29ம் நாள் காலை இரண்டரை மணி நேர பயணம் மேற்கொண்ட பின் ல சான் நகரை சென்றடைந்த முணுகப்பட்டு பி. கண்ணன் சேகரும், தி. கலையரசியும் படகு மூலம் ல சான் புத்த சிலையை கண்டு ரசித்தனர்.
புத்த சிலை தொடர்பான வரலாறு படி இச்சிலையின் உயரம் 7.1 மீட்டராகும். சிலையின் பாதத்தின் மேற்பகுதியில் ஒரே நேரத்தில் 100 பேர் நிற்க முடியும். அதன் காதின் துளையில் ஒரே நேரத்தில் இருவர் நிற்கலாம் என்று கூறப்படுகின்றது. சிலையை பார்வையிட்ட போது கண்ணன் சேகர் சீன வானொலி செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
பிற்பகல் ஏ மே மலையின் உயிரின சுற்றுசூழல் காட்சியை கண்டு ரசித்த அவர்கள் பிரதிநிதி குழுவின் நண்பர்களுடன் இணைந்து குரங்குகள் வாழ்கின்ற இடத்துக்கு சென்று பல்வகை குரங்குகளை கண்டு இரசித்தனர்.
|