• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-29 11:22:04    
யா ஹான் நகரில் பயணம்

cri

மே28 ஆம் நாள் எனது சீனப்பயணம் காலை 8.00மணிக்கு சங்தூ நகரிலிருந்து பேருந்து மூலம் துவங்கியது. என்னுடன் தலைவர் தி.கலையரசி வருகை தந்து பல விளக்கங்களை தந்தது பயனுள்ளதாய் அமைந்திருந்தது.‌ 90நிமிட பய்ணத்திற்கு பின் யா ஹான் நகரை அடைந்ததும் உள்ளூர் சுற்றுலாதுறை ஆணையத்தின் தலைவர் எங்களை அன்பாக வரவேற்று, உலக தேயிலை கலாச்சார பன்பாட்டு அருங்காட்சியத்திற்கு அழைத்துச் சென்றார். பிரமாண்டமான அந்த அருங்காட்சியகம் சீன நாட்டின் தேயிலை உற்பத்தி வளர்ச்சியை வரலாற்றை விளக்குவதோடு, உலக நாடுகளின் தேயிலை பயன்பாடு, வரலாறு, வளர்ச்சியை பறைசாற்றும் சர்வதேச களமாகவே இருந்தது.

அருங்காட்சியகத்தின் உள்ளே பல தேயிலை பயன்பாடு அரங்கங்கள் வியப்பூட்டும் வகையில் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. இந்தியாவின் தேயிலை பயன்பாடு வளர்ச்சி பற்றிய காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. காரணம் தமிழகத்தின் நீலகிரி தேயிலை உற்பத்தி பற்றி கொஞ்சம் விரிவாகவே அங்கே செய்திகள் இருந்தன. அதேபோல இந்திய டீக்கடை மாதிரி அரங்கம் ஒன்றும் அமைக்கபட்டிருந்தது. மேலூம் 2005 ஆம் ஆண்டு உலக தேயிலை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்ததாக அங்குள்ள சான்றுகள் மூலமே எனக்கு தெரியவந்தது. சீனாவின் தேயிலை கண்டுபிடிப்பு, தேனீர் பயன்பாட்டு பாத்திரங்கள், தேயிலை பற்றிய அறிஞர்களின் விளக்க‌ நூல்கள், காட்சிக்கு வைக்கப்பட்டும், மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாத பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தேயிலை பொதிகளை தொழிலாளர்கள் சுமந்து வணிகம் செய்த காட்சிகள் தத்ரூபமாக சித்தரிக்கபட்டுள்ளது. மன்னர் ஆட்சி காலத்தில் தேனீர் வசதி படைத்த கோமான்கள் பருகுவது மட்டுமே பழக்கமாக இருந்துள்ளது. அன்றைய நிலை முற்றிலூம் மாறி இன்று சீனாவில் தேனீர் அனைத்து சீனமக்கள் வாழ்விலூம் பிரிக்க முடியாத வளர்ச்சி கண்டுள்ளது.

இதனை அடுத்து தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு சென்றோம். பூமியிலிருந்து சுமார்‍‍2000 மீட்டர் உயரத்திலுள்ள தேயிலைத் தோட்டம் என்பதை விட, தேயிலைக்காடு எனச்சொன்னால் அதுமிகையில்லை! மேலே செல்லும் மின்சார கூடை வண்டியில் சென்று மலை உச்சியை அடைந்தோம். அங்கே அரசர்கள் பொழுது போக்க தோட்டங்கள் அக்காலத்தில் இருந்ததை காண முடிந்தது. அங்கே அரசகுடும்பத்திற்கு என தனியாக உயர்ரக தேயிலை பயிரிடப்பட்டு பயன்படுத்தி வந்துள்ள‌னர். அதைஅடுத்து 300வருட தேயிலை மரமொன்று இருப்பதை எல்லோரும் அதிசயமாக பார்த்து வியப்படைந்தோம். தேயிலை வரலாற்றில் சீனா தனக்கென ஒரு பன்பாட்டை நிலை நிறுத்தி இருப்பது நல்ல வளர்ச்சியை காட்டுகிறது.

மதிய உணவிற்கு பிறகு பண்டா இருக்கும் காட்சி த‌ளத்திற்கு சென்றோம். ஹோலூம் பகுதியில் ஓராண்டுக்கு முன் பண்டா பாதுகாப்பு இல்லம் நிலநடுக்க காரணத்தால் சிதைந்து போகவே மவ்ன்டன் மலைப்பகுதி பள்ளதாக்கில் மாற்றி பாதுகாத்து வருகின்றனர். உயிரின சூழல் பாதுக்காப்பு மண்டலமாக அரசின் மூலம் பராமரித்து வருவது சிறப்பானது. மலைகளும் நதிகளும் மரங்களும் என பசுமையின் முகவரியை பறை சாற்றி கொண்டிருக்கும் அந்த பள்ளதாக்கு பார்க்க ஆயிரம் கண் வேண்டும். வருடத்தில் 200க்கும் மேற்பட்ட நாட்களில் மழை பொழிந்து வருவதால் பசுமை அங்கு எப்போதும் குறைவதில்லை. அந்த இடத்தில் உள்ளூர் தொலைக்காட்சியும் சீனவானொலி இணையதள செய்தி ஊடகமும் என்னிடம் சுற்றுலா அனுபவங்களை பேட்டி கண்டனர். அப்போது " சீனநாட்டில் மூலவளம் அதிகமாக இருக்கிறது அதை வெளிக்கொணர்ந்து நல்ல முறையில் பயன்படுத்துவது சிறப்பானது. சீனாவின் வளர்ச்சியை அதன் முக்கியத்துவத்தை என்நாட்டில் பரப்ப முயற்சி செய்வேன்" என்பதை கூறினேன்

மாலை எங்களது சுற்றுலா இடமாக சாங்லின் நகருக்கு சென்றோம். 18மலைகள் சூழ பசுமை நிறைந்த உலகமாக சாங்லின் திகழ்கிறது. நதியோரம் அமைந்துள்ள இந்த நகரத்தின் தற்போதைய சூழல்,வணிகத்தளமாக மாறி இரவு முழுக்க வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. பல நூறு வருடங்களுக்கு முன் அப்பகுதியில் செல்வந்தர் குடும்பம் வாழ்ந்த இல்லம் தற்போது பார்வையாளர் காட்சிக் கூடமாக மாறியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில் ஒரு தூண் மூலம் இன்று மழை வருமா வராதா என செல்வந்தர் வீட்டில் கணிக்கப்பட்டது அறிந்து வியப்படைந்தேன். யா ஹான் நகர பயணம் சிறப்பாக முடிவுற்றது எனக்கு மகிழ்ச்சியே.