• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-30 19:51:00    
சிறப்பு நேயரின் ல சான் நக‌ரப் பயணம்

cri

மே 29 ஆம் நாள் பயணமாக காலை 08.30 மணிக்கு பேருந்து மூலம் ல சன் நகருக்கு புறப்பட்டோம். என்னுடன் தலைவர் தி.கலையரசி வந்தார்கள். இந்த நகருக்கு பல சிறப்புகள் இருக்கிறது. காலஞ்சென்ற சீன‌க் கவிஞர் ஜப்பானில் படிக்கும் போது, இந்த ஊரின் நதிகளின் சிறப்பை குறிக்கும் வகையில் தனது பெயரை மாற்றி கோமுலு என புதிய பெயரை வைத்துக்கொண்டுள்ளார். இந்த அழகு நகரின் ஒருபுரம் நீண்ட நதி ஓடிக்கொன்டிருக்கிறது. இந்த நதியோடு இரண்டு நதிகள் சங்கமித்து மூன்று நதிகளின் சங்கமம் ஆகும் இடம் என்ற பெயரை ல் சன் நகரம் பெறுகிறது. மூன்று நதிகள் சங்கமிக்கும் கரையில் பசுமை நிறைந்த மலையில் பெரிய புத்தர் சிலை அமைக்கபட்டு, உலக அளவில் இதுதான் பெரிய சிலை என்ற பெயரும் பெறுகிறது. ல சான் நகரத்தின் ஒரம் சிங்கிலி ஆறு, தாது ஆறு, மிங்சியாங் ஆறு என மூன்று ந‌திக‌ள் கூடும் இட‌த்தில் அமைந்துள்ள 71மீட்டர் புத்தர் சிலை நிறுவப்பட்டது அல்ல. ம‌லையைச் சார்ந்து அப்ப‌டியே செதுக்க‌ப‌ட்ட‌து. மிக‌ப்பெரிய‌ புத்த‌ர் சிலையின் பாத‌த்தின் மேல் ப‌குதியின் மேல் சுமார் 100 பேர் ஏறி நிற்க‌லாம். அதேபோல் காதின் நீள‌ம் 7 மீட்ட‌ராகும். காதின் துளை வ‌ழியே ஒரே நேர‌த்தில் இர‌ண்டு பேர் செல்ல‌முடியும் என்றால் இந்த‌ சிலையின் அள‌வை நீங்க‌ளே க‌ணித்துக்கொள்ள‌லாம். இந்த‌ பிர‌மாண்ட‌மான‌ புத்த‌ர் சிலையை முழுமையாக‌ பார்க்க‌ மூன்று ந‌திக‌ள் ச‌ங்க‌மிக்கும் ந‌தியின் மேல் க‌ப்ப‌ல் வ‌ழியாக‌ சென்று பார்த்தோம். இங்குள்ள‌ ம‌லைக‌ள் ஒரே பாறாங்க‌ல்லை வைத்தாற் போன்று, செம்பு நிற‌த்தில் இருக்கிற‌து. ப‌ல‌ ம‌லைக‌ள் சூழ்ந்த‌ ல‌ சான் ந‌க‌ரில் ந‌தி வ‌ழியே ச‌ற்று தொலைவிலிருந்து பார்த்தால், ம‌லை முக‌டு ப‌டுத்த‌ நிலையில் புத்த‌ரின் முக‌ம் இருப்ப‌து போல் ஒரு காட்சி தெரிகிற‌து. இது சுய‌மாக‌ ஏற்ப‌ட்ட‌து என‌ ம‌க்க‌ள் க‌ருதுவ‌தாக‌ த‌லைவ‌ர் க‌லைய‌ர‌சி அவ‌ர்க‌ள் கூறினார்.

ம‌திய‌ உண‌வுக்கு பிற‌கு எ மே ம‌லைப் ப‌குதிக்குச் சென்றோம். மிக‌ப்பெரிய‌ அள‌வில் ம‌லைக‌ளும், ம‌ர‌ங்க‌ளும் ப‌ர‌ந்து விரிந்து காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. த‌மிழ‌க‌த்தின் கொடைக்கான‌ல், நீல‌கிரி, ஏற்காடு போன்ற‌ ப‌ல‌ குளிர் பிர‌தேச‌ங்க‌ள் ஒன்று சேர்ந்தார் போல‌ பெரிய‌ அள‌வில் இந்த‌ காட்சி த‌ள‌ம் இருக்கிற‌து. ப‌ல‌ ஊற்று மூல‌ங்க‌ள் மூல‌ம் நீர் ஓடி ஆறாக‌ பெருகி ம‌லைப் பிர‌தேச‌த்தில் ச‌ல‌...ச‌ல... என‌ இசையையும், அழ‌கையும் த‌ந்துகொண்டிருக்கிற‌து. இந்தப்பகுதியில் சிங்கமுகக்குரங்கு அதிகமாக இருப்பதை பார்த்தேன். 1980 ஆம் ஆண்டிகளில் "சீனாவின் வனவிலங்கு போட்டியில்" இந்த சிங்கமுக குரங்கு பற்றிய செய்திகள் அதிகமாக இடம் பெற்றது. இய‌ற்கை மூல‌வ‌ள‌ங்க‌ளை சீன‌ அர‌சு ந‌ன்றாக‌வே ப‌ய‌ண்ப‌டுத்தி வ‌ள‌மாக்கி வ‌ருவ‌தை அறிந்து ம‌கிழ்ச்சிய‌டைகிறேன். மீன்டும் ச‌ந்திப்போம்.