• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-01 12:26:54    
சீனாவின் பெருஞ்சுவர் மீதான பாதுகாப்பு

cri
2007ம் ஆண்டு, சீனத் தேசிய அளவிடுதல் மற்றும் தேசிய தொல் பொருள் ஆணையங்கள், மின் வம்சத்தின் பெருஞ்சுவர் அளவிடுத்தன. இரண்டு ஆண்டுகளாக, பெருஞ்சுவரின் நெடுகிலுள்ள பத்து மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசம் மற்றும் மாநகரங்களிலும், நூற்றுக்கணக்கான பணியாளர்கள், பல உயர் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, பெருஞ்சுவரின் உருப்படியான நீளத்தை அளவிடுத்துள்ளனர். அதேவேளையில், பெருஞ்சுவருடன் தொடர்புடைய தொல் பொருட்கள், வரலாறு, மனிதச் சூழல் முதலிய சோதனைப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெய்ஜிங் மாநகரின் அளவிடுதல் ஆய்வகத்தின் துணை பொறியியலாளர் வான் லெய் தொடர்புடைய பணியில் சேர்ந்துள்ளார். நவீன தொழில் நுட்பத்தின் மூலம், பெருஞ்சுவரின் நீளத்தை அளவிடுக்கத் தேவை. பெருஞ்சுவரின் துவக்கம், ஒட்டுமொத்த நிலைமை போன்றவற்றை புரிந்துகொள்வது கடினம் என்று அவர் கூறினார்.

கச்சிதமான அளவிடுதல் புள்ளிவிபரங்களின் படி, மின் வம்சத்தின் பெருஞ்சுவர், லியெ நிங் மாநிலத்தின் கு மலை முதல், காங்சு மாநிலத்துக்கு செல்கிறது. ஏறக்குறைய 10 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களின் சுமார் 156 மாவட்டங்களும் இதில் அடங்குகின்றன. பெருஞ்சுவரின் நீளம் 8 ஆயிரத்து 851.8 கிலோமீட்டராகும். மேலும், மின் வம்சத்துடன் தொடர்புடைய 498 வரலாற்று சிதிலங்கள், அளவிடுதல் பணியில் தேடப்பட்டன. எடுத்துக்காட்டாக, பெய்ஜிங், தியன் சின் உள்ளிட்ட மாநகரங்களில், சில வரலாற்று சிதிலங்கள் காணப்படுகின்றன.

பெருஞ்சுவரின் நீளத்தை அளவிடுத்ததுடன், இதன் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நிலைமை, செயற்கைச் சூழல் மற்றும் மனித சீர்குலைவு ஆகியவை இதில் சோதனை செய்யப்பட்டன என்று தெரிகிறது.

நண்பர்களே, சீனாவின் பெருஞ்சுவர் மீதான பாதுகாப்பு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.