• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-31 19:00:55    
சிறப்பு நேயர் பறவைக்கூடு பார்த்து ரசிப்பது

cri

வணக்கம் நேயர்களே சீனப்பயணத்தின் நிறைவு நாளான மே31 ஆம் நாள் காலை 9.30 மணி அளவில் சீனாவில் நடைபெற்ற சிறப்புமிகு 29வது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு திடல்களை பார்க்க புறப்பட்டோம். என்னுடன் சகோரதரி கலைமகள் வந்திருந்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் திடைல்களில் புகழ்ப் பெற்ற "பறவைக்கூடு" திடலின் அமைப்பு மிகவும் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. ஒரு பறவை தன் கூட்டை பல குச்சிகளை சேர்த்து உருவாக்கும் கூடு போல், அந்த அரங்கின் அமைப்பு உருவாக்கப்பட்டது அருமை! பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் குழுமிய அரங்கம் பொருத்தமாகவே அமைக்கப்பட்டது வித்தியாசமான சிந்தனைதான். அரங்கத்தின் உள்புற விளையாட்டு தளத்தில் இருந்த ஒலிம்பிக் சின்னத்தின் பொம்மையோடும், பார்வையாளர் பகுதியிலும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். அதற்கு அடுத்துள்ள நீச்சல் போட்டி நடைபெற்ற அரங்கத்தில் நுழைந்தோம். அருவின் சத்தம் சலசலக்க செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் விழ்ச்சி நம்மை, இயற்கையாக மணத்தோடு நம்மை வரவேற்றது. அடுத்து அமைக்கப்பட்டிருந்த சுவர்கள் பனிக்கட்டியின் உருவில் அமைக்கப்பட்டது கயிலாய மலையை பார்த்தது போல் இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் நீச்சல் குளங்கள் என் பார்வையை சுண்டியிழுத்தன. நீச்சல்குளம் பகுதியின் மேலே அனைத்து நாட்டு கொடிகளும் கட்டப்பட்டிருந்தது. அதில் நமது இந்தியக்கொடி இருந்ததைப் பார்த்து மரியாதை நிமித்தமாக ஒரு வணக்கம் செலுத்தினேன். அப்படியே அங்கிருந்த வணிகவளாகத்தை பார்வையிட்ட போது எல்லா பொருட்களும் ஒலிம்பிக் சின்னம் பொறிக்கபட்டிருந்தது. ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது வந்து பார்க்கமுடியாத ஏக்கத்தை இன்றைய பயணம் நிறைவேற்றியது என்றால் அது மிகையில்லை.