• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-01 10:28:22    
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களின் காவலர் பணி 2

cri
அரசு சாரா தூதர் பணி மூலம், உலகிற்கு, குவாங் சோ நகரின் தனிச்சிறப்பியல்பு, நடையுடை பாவனைகளை எடுத்துசொல்ல விரும்புகிறேன். சீனத் தனிச்சிறப்பியல்பு, குவாங்துங் மாநில சிறப்பியல்பு கொண்ட குவாங் சோ தனிச்சிறப்பியல்பு வாய்ந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த வேண்டும். தனது சிறப்பு அறிவுடன் இணைந்து, ஆங்கில சேவை மற்றும் செய்தி ஊடக பிரச்சாரத்தில் செவ்வனே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போது, தொண்டர்களின் காவலர் பணியில் பல வெளிநாட்டு நண்பர்கள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கின்றனர். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆங்கில நட்சத்திரங்களின் போட்டியில் கலந்துகொள்வது மூலம், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களாக மாற விரும்புகின்ற வெளிநாட்டு நண்பர் Alberto இவ்வாறு தெரிவித்தார்.

எங்களுக்கு சிறந்த பணி வாய்ப்பு ஒன்றை குவாங் சோ வழங்கியது. அதன் மூலம், பல நண்பர்களை நான் அறிந்து கொண்டேன். தொண்டர் சேவை பணியில் பங்கெடுப்பது மூலம் நான் பெற்ற அறிவை குவாங் சோவுக்கு திரும்ப கொடுக்க விரும்புவதாகும் என்று அவர் கூறினார்.
உன்னத பணியில் தொண்டர்கள் பங்கெடுக்க சீன பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞரும், குவாங் சோ தொண்டர் புகழ் மிக்க தூதருமான Zhong Nanshan எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.
மே 12ம் நாள், 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவும் தென் கொரிய Gwangju இளைஞர் சேவை மையத்தின் பிரதிநிதிக் குழுவும் குவாங் சோவில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர் சேவை பணியை கூட்டாக மேற்கொள்ளும் குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளன. 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர் சேவையின் முதல் வெளிநாட்டு நகராக தென் கொரியாவின் Gwangju மாறியுள்ளது. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, தென் கொரிய குடியுரிமையைக் கொள்கின்ற தொண்டர்கள் இந்த விளையாட்டுப் போட்டியி்ல் கலந்துகொள்ளும் தென் கொரிய வீரர்களுக்கு சேவையை வழங்குவார்கள்.

தென் கொரியாவுக்கு திரும்பிய பின், பல்வேறு முயற்சிகள் மூலம், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றி பரப்புரை செய்ய விரும்புவதாக இப்பிரதிநிதிக் குழுவின் தலைவரும், தென் கொரிய Gwangju இளைஞர் சேவை மையத்தின் தலைவருமான Lee Yung-Hun தெரிவித்தார்.
நாட்டுக்கு திரும்பிய பின், தென் கொரிய Gwangju இளைஞர் சேவை மையத்தின் சார்பில் நான் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை பரப்புரை செய்வதோடு, மே 21ம் நாள் நடைபெற்ற தென் கொரிய மத்திய இளைஞர் சேவை மையத்தின் செயற்குழு கூட்டத்தில், குவாங் சோ மற்றும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை பரப்புரை செய்தேன் என்று அவர் கூறினார்.

மேலதிக மக்கள் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர் சேவை பணியில் பங்கெடுக்க வேண்டும் என்று ஆசிய ஒலிம்பிக் செயற்குழுவின் துணைத் தலைவர் Huo Zhenting வேண்டுகோள் விடுத்தார்.
ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் மேலதிக மக்கள் விளையாட்டில் பங்கெடுத்து, நட்பை பேணிமதித்து, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர் சேவை பணியில் சேர்ந்து, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஊக்கமளிக்க விரும்புகின்றேன் என்று அவர் கூறினார்.
நேயர்கள் இது வரை. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களின் காவலர் பணி பற்றி கேட்டீர்கள்.