நவ சீனாவின் வைர விழா எனும் பொது அறிவுப் போட்டியை சீன வானொலி நிலையம் ஜூன் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக துவக்கியது. 53 மொழிப் பிரிவுகள், வானொலி, இணையங்கள், படம், எழுத்து, இசை ஆகிய பல்வகை ஊடக வழிமுறைகள் மூலம், வெளிநாட்டு நேயர்களுக்கு, நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில் பொருளாதாரம், தூதாண்மை, சட்ட நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், மக்கள் வாழ்க்கை ஆகிய துறைகளில், சீனா பெற்றுள்ள மாபெரும் மாற்றங்களை விவரித்தன.
பொது அறிவுப் போட்டியில், வளம் அடைவது, ஓரளவு வசதியான வாழ்க்கை நிலை அடைவது, உலகத்தை நோக்கி செல்வது, சட்டத்தின் படி நிர்வகிப்பது, விண்வெளி ஆய்வு ஆகிய தலைப்புகளில் 5 கட்டுரைகள் இடம் பெறுகின்றன.
2009ம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், நவ சீனாவின் வைர விழா எனும் பொது அறிவுப் போட்டி நடவடிக்கை நிறைவடையும். சிறப்பு பரிசு பெறும் நேயர்கள் சீனாவில் இலவசமாக சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள அழைக்கப்படுவர்.
|