• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 10:43:25    
ஒரு வகை சீன தேனீர் உணவு

cri
க்ளீட்டஸ் – வணக்கம், எங்களோடு சேர்ந்து சுவையான சீன உணவு வகைகளின் தயாரிப்பு முறை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.
வாணி – இந்திய மக்களுக்கு பிற்பகல் தேனீர் அருந்தும் வழக்கம் உண்டு.
க்ளீட்டஸ் – ஆமாம், தேனீர் அருந்தி, நண்பர்கள் அல்லது சக பணியாளர்களுடன் உரையாடுவது நல்ல பொழுதுபோக்கு வழிமுறைகளில் ஒன்றாகும். சிறிது நேரம் ஓய்வு பெற்ற பின், பணியில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடலாம்.
வாணி – இன்று ஒரு வகை சீன தேனீர் உணவு தயாரிப்பு பற்றி கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் – அப்படியா, நல்லது.
வாணி – முதலில் தேவையான பொருட்கள் பற்றி தெரிவிக்கின்றேன்.
இஞ்சி 200 கிராம்
தேன் 400 கிராம்
காய்ந்த வெண் சாமந்திப்பூர் 20 கிராம்
க்ளீட்டஸ் – வாணி, வெண் சாமந்திப்பூர் எப்போதும் கிடைக்குமா?
வாணி – இது, இலையூதிர் காலத்தில் மலரும் பூவாகும். பூவை வலர வைத்து அதை தேனீர் போல குடிப்பது, உடல் வெப்பத்தை தணிக்க உதவும் கண்களுக்கும் நல்லது. மேலும், நச்சுத் தன்மை, தலை வலி முதலியவற்றை நீக்கும் பயன் இதற்கு உண்டு.
க்ளீட்டஸ் – நல்ல பான வகை தான்.

வாணி – முதலில், இஞ்சியின் தோலை நீக்கி, அவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள், அடுப்பின் மீது வாணலியை வைத்து, இஞ்சி துண்டுகள், காய்ந்த வென் சாமந்திகள் ஆகியவற்றை வாணலியில் கொட்டுங்கள். உரிய அளவில் தண்ணீரை இதில் ஊற்றவும். பிறகு கொதிக்க வையுங்கள். வெந்நீர் தயார் செய்யப்பட்ட பின், சிறிய சூட்டில் தொடர்ந்து 20 நிமிட நேரம் காலமாக வேகவைக்க வேண்டும்.
க்ளீட்டஸ் – பிறகு, தேனை இதில் ஊற்றவும். நன்றாக ஆற்றவும்.
வாணி –நுரையை நீக்கி, எஞ்சிய சாற்றை ஒரு பாத்திரத்தில் வையுங்கள்.
க்ளீட்டஸ் – குடிக்கும் போது, 2 தேக்கரண்டி எடுத்து கோப்பையில் வைத்து, மேலும் 200 மில்லி லிட்டர் வெந்நீரை இதில் ஊற்றி, ஆறிய பின் பருகவும்.
வாணி – நல்ல சுவையான தேனீர் தயார். 
க்ளீட்டஸ் – வாணி, தேனீர் அருந்தும் போது, சிற்றுண்டி இருந்தால், நல்லது.
வாணி – சரி, அடு்த்து, ஒரு வகை சிற்றுண்டியின் தயாரிப்பு முறை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். நிலக்கடலை, உங்களுக்கு பிடிக்குமா?
க்ளீட்டஸ் – பிடிக்கும்.
வாணி – சரி, முதலில், நிலக்கடலை 800 கிராம், உப்பு 3 தேக்கரண்டி, சர்க்கரை ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை தயார் செய்யுங்கள்.
க்ளீட்டஸ் – நிலக்கடலைகளை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் போதிய அளவில் தன்னீர் ஊற்றி, அதில் நிலக்கடலை, உப்பு சர்க்கரை ஆகியவற்றை போடுங்கள். 12 மணி நேரம் அப்படியே ஊற வையுங்கள்.
வாணி – நிலக்கடலைகளை நீரிலிருந்து வெளியேற்றி, ஒரு பெரிய பாத்திரத்தில் சுமார் 5 மணி நேர உலர வையுங்கள்.
க்ளீட்டஸ் – வீட்டில் நுண்ணலை அடுப்பு இருந்தால், இந்த நிலக்கடலைகளை முதலில் 600 வாட் சூட்டில் 2 நிமிடம் வேக வையுங்கள். பிறகு, வெளியே எடுத்து, நிலக்கடலைகளை மறு பக்கம் திருப்புங்கள், தொடர்ந்து 600 வாட் சூட்டில் 2 நிமிடமாக வேக வையுங்கள்.

வாணி – இப்படி சுமார் 3 அல்லது 4 முறை செய்தால், போதும். வீட்டில் நுண்ணலை அடுப்பு இல்லாத நிலையில், அடுப்பின் மீது வாணலியை வைத்து, நிலக்கடலைகளை நேரடியாக போட்டு வறுக்கவும். இப்படி செய்தால் நல்ல சுவையான நிலக்கடலைகள் கிடைக்கலாம்.
க்ளீட்டஸ் – சரி, நேயர்களே, சொந்தமாக தயாரித்த தேனீருடன், சுவையான நிலக்கடலைகளையும் தின்னுங்கள்.