• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-03 16:56:02    
2009ம் ஆண்டு சீன சர்வதேச மகளிர் வாலிபால் போட்டி

cri
சீனாவின் நடுப்பகுதியிலுள்ள லோ ஹோ நகரில், சீனாவின் புதிய தலைமை பயிற்சியாளர் சை பின் தலைமை தாங்கி வழிநடத்திய சீன மகளிர் கைப்பந்து அணி, 3-0 என்ற ஆட்டக்கணக்கில் கியூபா அணியை தோற்கடித்தது. 3 வெற்றிகள் என்ற சாதனையை கொண்டு 2009ம் ஆண்டு சீன சர்வதேச மகளிர் கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றது.

இத்தாலியைச் சேர்ந்த கார்லோ அன்செலோத்தி, Chelsea அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பணி ஒப்பந்தம், இவ்வாண்டு ஜுலை முதல் நாள் துவங்கியது. ஒப்பந்த காலம் அடுத்த 3 ஆண்டுகளாகும்.
கார்லோ அன்செலோத்தி, AC MILAN அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். ஐரோப்பாவின் பல சாதனைகளையும் இவர் பெற்றுள்ளார்.
2014ம் ஆண்டு பிரேசில் கால்பந்து உலக கோப்பை போட்டிகளை நடத்தும் 12 நகரங்களின் பெயர்பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஜூன் முதல் நாள் வெளியிட்டது. பிரேசிலின் 17 நகரங்கள், போட்டிகளை நடத்த, விண்ணப்பம் செய்தன.

இந்த நகரங்களில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் 12 நகரங்களை தேர்ந்தெடுத்தது.
கால்பந்து உலக கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி, 5 முறைகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இவ்வெண்ணிக்கை, உலகில் மிக அதிகம்.
16வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்பு குழுவின் கொண்டாட்டம் மற்றும் பண்பாட்டு நடவடிக்கையின் தலைவர் ஹோ சி சின் தலைமையில் ஆசிய பாதை என்னும் பிரதிநிதிக் குழு, மே 31ம் நாள் கம்போடியாவின் கடற்கரை நகரான சிஹானொக் நகரில் சென்றடைந்து, 2010ம் ஆண்டு குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டியை பரப்புரை செய்தது.

பெய்ஜிங் நேரப்படி, ஜூன் முதல் நாள் முடிவடைந்த ஜெர்மனி கால்பந்து தொடர்போட்டியின் இணைப்புப்போட்டியின் 2வது போட்டியில் சீன வீரர் சாவ் ஜியா யீ விளையாடுகின்ற கோத்புஸ் அணி, 0-2 என்ற கோல்கணக்கில் நியுர்பெர்க் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், இரு போட்டிகளில், கோத்புஸ் அணி 0-5 என்ற கோல்கணக்கில் நியுர்பெர்க் அணியிடம் தோல்வியடைந்து, இத்தொடர்போட்டியில் ஜெர்மனியின் 2வது நிலையை பெற்றது.
2009ம் ஆண்டு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் நீர் குதிப்பு சாம்பியன் பட்ட போட்டியின் கடைசி போட்டி, ஜூன் முதல் நாள் மாட்ரிட்டில் முடிவடைந்தது. அனைத்து 8 போட்டிகளிலும், இளைய வீரர்கள் இடம்பெறும் சீன அணி, 7 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கங்களை பெற்றது.