சர்வதேசக் கண்காட்சி ஆணையத்தின் பாராட்டுக்கள்
cri
சர்வதேசக் கண்காட்சி ஆணையத்தின் 145வது முழு அமர்வு 2ம் நாள் பாரிஸில் நடைபெற்றது. 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணி பற்றிய சீனப் பிரதிநிதிக் குழுவின் புதிய அறிக்கையை கூட்டம் கேட்டறிந்து, இதனை உயர்வாக மதிப்பிட்டது. நகரங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போது, நகரம் வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை உலகப் பொருட்காட்சியின் தலைப்பாக ஷாங்காய் மாநகரம் தேர்ந்தெடுப்பது, நடைமுறைக்கு ஏற்றதாகும் என்று இவ்வாணையத்தின் தலைவர் Jean-Pierre Lafond கூறினார். இந்தப் பொருட்காட்சி முழு உலகின் மாபெரும் விழாவாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டதால், பல்வேறு நாடுகளின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மீதான ஆர்வம் குறையவில்லை. பொருட்காட்சியில் கலந்து கொள்ள உறுதி செய்துள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் எண்ணிக்கை வரலாற்றில் புதிய பதிவாக அமைவது இதனை காட்டுகின்றது என்று ஷாங்காய் மாநகரின் தலைவர் ஹான் சங் கூட்டத்தில் தெரிவித்தார்.
|
|