• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-04 17:11:56    
மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் பரப்பும் கூற்று

cri
நீண்டகாலமாக திபெத் மொழியை ஆராய்ந்த நான் திபெத் மொழி போதியளவில் வளர்ச்சியடைந்த காலம் இப்போது தான் என்று கருதுகின்றேன். திபெத் மொழி புத்தமதத் திருமறையை பாதுகாக்க நடுவண் அரசு கோடிக்கணக்கான யுவானை ஒதுக்கியுள்ளது. புத்தமதத் திருமறையை சரிபடுத்தும் அதிகாரம் சீன திபெத்தியல் ஆய்வு மையத்துக்கு வழங்கப்பட்டது. திருமறையின் பக்கங்கள் அனைத்தும் சரிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட வேண்டும். இந்த பாதுகாப்புப் பணி 20 ஆண்டுகளாக நீடித்தது. பல நூறு அறிஞர்களும் பணியாளர்களும் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சீராக்கப்பட்ட இந்த புத்தமதத் திருமறை விரைவில் வெளியிடப்படும். 13வது தலாய்லாமா விரும்பிய ஆனால் நனவாக்காத புத்தமதத் திருமறை பாதுகாப்பு முயற்சியை நடுவண் அரசு அவருக்காக நிறைவேற்றியுள்ளது. மேலை நாட்டு அறிஞர்கள் சீனாவில் ஆய்வுப் பயணம் செய்த போது இந்த சீரமைப்புப் பணியை பார்த்துவிட்டு சீன நடுவண் அரசை உயர்வாக பாராட்டினர் என்று ஆய்வாளர் ஸாய் தான் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.

இது வரை உலகில் இவ்வளவு அதிக தொகை ஒதுக்கி இவ்வளவு அதிக மனிதர்கள் இதில் பங்கெடுக்க இவ்வளவு நீண்ட காலமாக பண்பாட்டுத் தொல் பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொண்ட நாடு சீனா மட்டுமே என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். பல்வேறு நாடுகள் சீனாவின் மற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள எண்ணியல் நுட்பம் இப்போது திபெத்தில் பயன்படுத்தப்படுகின்றது. தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் செல்லிட பேசி, சாலை மற்றும் கடைகளில் தொங்கவிடப்படும் காட்சித் திரைகள் திபெத் மொழியில் திபெத்தின மக்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் பரவின. சீன நடுவண் அரசை குற்றஞ்சாட்டும் வகையில் சில சிறிய வானொலி அல்லது இணையதளம் உண்மைக்கு புறம்பான கூற்றை பிரச்சாரம் செய்வது நவீன திபெத் ஒளி மற்றும் ஒலி வசதிகளின் முன்னால் மிகச் சிறியதாக காணப்படுகின்றது. உண்மையான திபெத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் தாராளமாக திபெத்தில் சுற்றுலா அல்லது ஆய்வுப் பயணம் மேற்கொள்ளுங்கள். இந்த முயற்சிக்கு நாங்கள் உளமார வரவேற்பு தெரிவிக்கின்றோம் என்று ஆய்வாளர் ஸாய் தான் கூறினார்.