• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-04 17:13:36    
மக்கள் வழிபட வசதி

cri
மக்கள் வழிபட வசதி

மத நம்பிக்கை கொண்ட மக்கள் வழிப்படுவதற்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் விதமாக பெய்ஜிங் மாநகரில் 12 தேவாலையங்கள், 2 மசூதிகள் மற்றும் கோயில்களை கட்டியமைக்க போவதாக பெய்ஜிங் மாநகராட்சி அறிவித்துள்ளது. பெய்ஜிங்கின் தென் மேற்கிலுள்ள Changxindian னில் அமையப்போகின்ற தேவாலைய கட்டுமானத்திற்கு 12 மில்லியன் யுவான் செலவிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக பெய்ஜிங் மதத்துறை அதிகாரி Yang Xiaodong தெரிவித்தார். 2 மசூதிகளும் இந்த திட்டத்தில் உள்ளதாக பெய்ஜிங் மதத்துறையின் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீனருக்கு பிரான்ஸ் விருது

சீனாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஆய்வு ஒத்துழைப்புகளை மேம்படுத்தியதற்கு சீன வானிலை ஆய்வாளர் ஒருவர் பிரான்ஸ் நாட்டின் கௌரவ விருதை பெற்றுள்ளார். சீன அறிவியல் கழக உறுப்பினரான Qin Dahe, அரசின் காலநிலை மாற்றத்திற்கான குழுவில் முன்னணி உறுப்பினராக இருக்கின்றார். இவர் பிரான்ஸின் கிரிநோபிள் நகரத்தின் கிரிநோபிள் விருதை பெற்றுள்ளார். பிரான்சிலுள்ள ஜோசப் ஃபோரியர் பல்கலைக்கழக பனியாற்றியியல் மற்றும் சுற்றுச்சூழலின் புவி இயற்பியல் ஆய்வகத்தோடு தென் துருவம் மற்றும் இமயமலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட புதிய தரவுகளை அறிவதற்கான ஆய்வுகளை Qin Dahe வழிநடத்தினார். 61 வயதான இவர் தென் துருவத்தை கடந்த முதல் சீனர் ஆவார். பனியாற்றியியல் என்பது பனியை பற்றியும் பனி படலங்கள் புவி பரப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ஆய்வதாகும். புவி இயற்பியல் என்பது புவியில் காணப்படுகின்ற அனைத்தையும் ஆய்ந்து அறிவதாகும்.

சீன மென்பொருள் துறை

2008 ஆம் ஆண்டு சீன மென்பொருள் தொழில் துறை 29 விழுக்காடு வருமான வளர்ச்சி பெற்றதாக தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. மென்பொருள் தொழில்நுட்ப சேவைகளும், மென்பொருட்களின் விற்பனையும் முறையே 40, 17 விழுக்காடு வளர்ந்துள்ளன. உயர் தொழில்நுட்ப துறை கடந்த ஆண்டு விரைவாக வளர்ந்துள்ளது. ஓராண்டு விற்பனையில் ஐந்து மில்லியன் யுவானுக்கு அதிகமாக பெற்றுள்ள அரசு சார் மற்றும் தனியார் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருமானம், முந்தைய ஆண்டை விட 14 விழுக்காடு அதிகரித்தது. மடிக்கணினி மற்றும் LCD தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற அதிக விலையான பொருட்களின் தயாரிப்பு 20 விழுக்காடு அதிகரித்தது. மென்பொருள் துறை 580 பில்லியன் யுவான் வரவை உருவாக்கியது. ஆண்டுதோறும் 20.8 விழுக்காடு வளர்ச்சியை இது நிலைநிறுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.