2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியில் கலந்து கொள்வதை காம்பிய குடியரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 53 ஆப்பிரிக்க நாடுகளில் 51 இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளன. உலக பொருட்காட்சி வரலாற்றில் ஆப்பிரிக்க நாடுகள் பங்கு எடுக்கின்ற உயர்வான பதிவை இது உருவாக்கியுள்ளது. ஷாங்காய் உலக பொருட்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவிக்கின்றது.
இதுவரை 239 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் சீனாவின் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளன.
|