• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-05 12:33:42    
 திபெத் இனத்தவரான பாசாங் தாவாவும் அவரது நண்பர்களும் அ

cri
பெய்ஜிங்கில் வாழ்கின்ற திபெத் இனத்தவர்கள், தற்போதைய திபெத்தின பண்பாட்டுப் பிரதிநிதிகளாகவுள்ளனர். திபெத்தின பண்பாடு, வேறு சில தேசிய இனங்களின் பண்பாடுகளுடன் இணைந்து, உலகமயமாக்கத்தின் அறைகூவலை கூட்டாக சமாளிக்க வேண்டும். திபெத்தின மக்கள், நவீனமயமாக்கத்தோடு, சொந்த பண்பாட்டுத் தனிச்சிறப்பை எப்படி பேணிக்காப்பது என்பதை கருத்தில் கொண்டிருக்கின்றனர். இன்றை நிகழ்ச்சியில், திபெத் இனத்தை சேர்ந்த பாசாங் தாவா என்பவரும் அவரது நண்பர்களும் பற்றிக் கூறுகிறோம். அறிவிப்பாளர் ஜெயா.

பெய்ஜிங்கில் மாக்கியெ ஆமே என்ற ஒரு திபெத்தின உணவு விடுதி இருக்கிறது. அங்கு, பாசாங் தாவாவும் அவரது நண்பர்களும், ஆடிப்பாடி வருகின்றனர்.

பாசாங்கைப் பொறுத்த வரை, வீட்டில் தங்கியிருப்பதறத்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. தனது ஊரில், உள்ளூர் மக்களுக்கு பயணிகளை விருந்தினர்களாக வீட்டுக்கு அழைக்கும் வழக்கம் உண்டு. தற்போது, இது உள்ளூர் சுற்றுலா துறையின் தனிச்சிறப்பாக மாறியது. அப்போது, அவர் விருந்தினர்களுக்கு தூய்மையான, வெள்ளை Khatag வழங்கினார். 10 ஆண்டுகளுக்கு முன், அவர், பெரும் கனவுகளோடு, ஊரை விட்டு, பெய்ஜிங்கிற்கு வந்தார். அவர் கூறியதாவது,

முதலில், எனது ஒரு நண்பர், எனக்கு ஆடல் மற்றும் பாடலைக் கற்பித்தார். இக்கலையை உண்மையாக கற்க விரும்பினால், செழுமையான பண்பாட்டைக் கொண்ட இடத்திற்குச் சென்று, மேலும் அதிகமான சிறப்பு அறிவை அறிந்து கொள்ள வேண்டும். சொந்த அறிவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார் என்று பாசாங் குறிப்பிட்டார்.

திபெத் இனத்தோர் பிறப்புக்குப் பின், பேச முடியும் என்றால், பாடவும் முடியும். நடக்க முடியும் என்றால், ஆடவும் முடியும் என்பது, திபெத்தின பழமொழியாகும். பாசாங் இயல்பான குரலை கொண்ட போதிலும், பெய்ஜிங்கில் மேலும் சிறப்பான வாய்ப்பாட்டு அறிவைப் படிக்க விரும்புகின்றார். சீன மத்திய இசைக் கல்லூரியின் ஆசிரியர், அவருக்கு மூச்சுப்பயிற்சி வழிமுறையைக் கற்றுக் கொடுத்தார்.

முன்பு, மூச்சுப்பயிற்சி வழிமுறை தெரியவில்லை. பாடும் போது, மூச்சை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்திருக்கவில்லை. ஆசிரியர் ஹூ எனக்கு அவற்றைக் கற்றுக்கொடுத்தார். மூச்சை கட்டுப்படுத்திகையாள கற்ற பின், பாடும் போது, பெரிதாக மூச்சுத் திணறலை உணர்வதில்லை என்று பாசாங் கூறினார்.