• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-05 09:29:53    
உலக குழந்தைகள் நாளில் விளையாட்டு

cri
சீனாவின் புகழ் பெற்ற கூடைபந்து வீரர் யாவ் மிங், தனது மணைவி யை லி அம்மையாருடன், மே 31ம் நாள் பெய்ஜிங் சி ச்சியா ஹூ துங் துவக்க பள்ளிக்கு சென்று, மாணவர்களுடன் உலக குழந்தைகள் நாளை கொண்டாடினர். லின் தன், சியே சின் ஃபாங் ஆகியோர் இவ்வாழ்த்துக்கள் நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
உலக குழந்தைகள் நாளின் போது, பெய்ஜிங் விளையாட்டுப் பல்கலைகழகத்தின்

தேசிய பயிற்சி தள அரங்கில், பெய்ஜிங்கின் 30 துவக்க பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர்களுடன் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்.
ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்றவர்கள், இந்த பள்ளிக் குழந்தைகளுடன் இன்பமான விழாவில் கலந்து மகிழ்ச்சியடைந்தனர்.
2014ம் ஆண்டு பிரேசில் கால்பந்து உலக கோப்பை போட்டிகளை நடத்தும் 12 நகரங்களின் பெயர்பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஜூன் முதல் நாள் வெளியிட்டது. பிரேசிலின் 17 நகரங்கள், போட்டிகளை நடத்த, விண்ணப்பம் செய்தன.

இந்த நகரங்களில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் 12 நகரங்களை தேர்ந்தெடுத்தது.
கால்பந்து உலக கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி, 5 முறைகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இவ்வெண்ணிக்கை, உலகில் மிக அதிகம்.
அமெரிக்க நேரப்படி ஜூன் முதல் நாள், சீன ஆடவர் கூடைப்பந்து அணிக்கு தலைமை தாங்கியுள்ள அமெரிக்க பயிற்சியாளர் தெல் ஹாரிஸ், 50 ஆண்டு காலம் நீடித்த பயிற்சியாளர் பணியை முடிக்க தீர்மானித்துள்ளார்.
அடுத்த திங்களில், 72 வயதை அடையும் தெல் ஹாரிஸ், இவ்வாண்டு, CHICAGO BULLS அணியின் உதவி பயிற்சியாளராக பணி புரிகின்றார்.

கடந்த 50 ஆண்டுகளில், தெல் ஹாரிஸின் பயிற்சியாளர் அனுபவம் மிக செழுமையானது. அவர், மேனிலை பள்ளி, பல்கலைகழகம், NBA, வெளிநாடுகள் ஆகியவற்றில் பயிற்சியாளராக பணி புரிந்துள்ளார். NBAயில் மிக சிறந்த பயிற்சியாளர் பரிசை இவர் பெற்றுள்ளார்.
2004ம் ஆண்டு, சீன கூடைப்பந்து சம்மேளனம், தெல் ஹாரிஸூக்கு சீன ஆடவர் கூடைபந்து அணியின் பயிற்சியாளராக அழைப்பு விடுத்தது. அவர், சீன ஆடவர் கூடைப்பந்து வரலாற்றில் முதல் வெளிநாட்டு தலைமை பயிற்சியாளராவார். அவரது தலைமையில் சீன ஆடவர் கூடைபந்து அணி, எதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டது.