• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-08 17:26:35    
பெருஞ்சுவர் பாதுகாப்பு திட்டம்

cri

நீண்டாகலமான வளர்ச்சி, சமூகத்தின் மாற்றம் ஆகியவற்றால், செயற்கை மற்றும் மனித அச்சுறுத்தலை பெருஞ்சுவர் எதிர்நோக்கி வருகிறது. சீனாவின் வரலாற்றில், போர், வெள்ளப்பெருக்கு முதலியவை, பெருஞ்சுவருக்கு தீங்கு விளைவித்தன. பெருஞ்சுவர் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள், அங்குள்ள கல்களை திருடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் பெருஞ்சுவருக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளன. பெருஞ்சுவர் பாதுகாப்புக்கு தீங்கு விளைக்கின்ற காரணிகள் தொடர்ந்து மாறியுள்ளன. உலக காலநிலை சுற்றுச் சூழல் இடைவிடாமல் மாறி வருகிறது. அதேவேளையில், திட்டப்பணிகளால் கொண்டு வருகின்ற நாசம் அதிகம். பெரிய அடிப்படை வசதிக் கட்டுமானங்கள், உயர் வேக நெடுஞ்சாலை, இருப்புப் பாதை போன்ற திட்டப்பணிகள், பெருஞ்சுவரைத் தாண்டும் போது, பெருஞ்சுவருக்கு ஏற்படுத்தலாம். சில பிரதேசங்களில், வளர்ச்சி மண்டலமும், வீட்டு நிலச் சொத்து வளர்ச்சியும் இதில் அடங்குகிகன்றன என்று சீனத் தேசிய தொல் பொருள் ஆணையத்தின் தலைவர் சாங் வான் சியாங் தெரிவித்தார்.


2006ம் ஆண்டு, பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டத்தை சீனா வெளியிட்டது. இதன் படி, பெருஞ்சுவரைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். பண்பாட்டு மரபு செல்வம் ஒன்றுக்கு, சிறப்புத் திட்டத்தை வகுப்பது இது முதல் முறையாகும். பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டப்பணிக்கான ஒட்டுமொத்த பணித் திட்டம் செவ்வனே செயல்படுத்தப்பட்டால், பெருஞ்சுவர் பாதுகாப்புப் பணி மேலும் நன்றாக மேற்கொள்ளலாம் என்று பெருஞ்சுவர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் லொ செ வான் கூறினார்.

 
மின் வம்ச பெருஞ்சுவருக்கான மூலவளச் சோதனைப் பணி, சீனத் தேசிய மூலவள கள ஆய்வு பணியின் முதலாவது கட்டமாகும். அடுத்து, சின் வம்சம் மற்றும் பிற வம்சங்களின் பெருஞ்சுவர்களின் மூலவளச் சோதனை பணி துவங்கும்.


நண்பர்களே, பெருஞ்சுவர் பாதுகாப்பு திட்டம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு  இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.