• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-09 17:02:39    
சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலான தொழிற் கல்வி

cri
2007ம் ஆண்டு, சீனாவில் சுமார் 50 இலட்சம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்துக் கொண்டு பட்டம் பெற்றனர். வேறு பிரதேசங்களில் பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளைத் தேடும் போது, சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் பல தொழிற் கல்லூரிகளின் பட்டதாரிகள் எளிதாக பணி புரியத் துவங்கியுள்ளனர். புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டு இத் தொழிற் கல்லூரிகளின் பட்டதாரிகளில் 90 விழுக்காட்டுக்கு அதிகமானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இவ்வாண்டு, சின் ச்சியாங் மென் ரகத்தொழில் துறை தொழில் நுட்பக் கல்லூரியின் உயர் தொழில் வகுப்பில் 2400 மாணவர்கள் படிப்பை முடித்தனர். அவர்களில் 95 விழுக்காட்டினர் வேலை வாய்ப்பு பெற்றனர். சின் ச்சியாங் க்லாமாயி தொழில் நுட்பக் கல்லூரியில் இந்த விகிதாச்சாரம் 92 விழுக்காட்டை எட்டியது. சின் ச்சியாங் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரியில் இது தொடர்ந்து 3 ஆண்டுகளாக 96 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. சின் ச்சியாங் மின்னணு இயந்தியத் தொழில் நுட்பக் கல்லூரியின் மின்னணு இயந்திரத் துறையின் பட்டதாரிகளிடையில் ஆட்கள் குறைவு வேலை வாய்ப்புகள் அதிகம் என்ற நிலைமை தோன்றியுள்ளது. இந்தக் கல்லூரியின் வேந்தர் wang jian ming கூறியதாவது

 

கடந்த சில ஆண்டுகளாக, எமது மின்னணு இயந்திரம், நிர்வாகம் ஆகிய துறைகளின் பட்டதாரிகளிள் அனைவரும் வேலை வாய்ப்பு பெற்றனர். ஏன் சின் ச்சியாங் பிரதேசத்தைத் தவிர்த்த பிரதேசங்களிலிருந்து ஆட்கள் தேவைக்கான கோரிக்கை வந்துள்ளது. 2008,2009ம் ஆண்டுக்கான பட்டத்தாரிகள் தேவைப்படும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக, சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் அரசு, தொழில் துறையிலான தொழில் நுட்பக் கல்வியை வளர்க்க பெரும் முயற்சி செய்து வருகின்றது. குறிப்பாக, சிறப்புத் தொழில் நுட்ப திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் கவனம் செலுத்தப்படுகின்றது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், தொழில் நுட்பக் கல்லூரிகளின் கட்டுமானத்தில் உள்ளூர் அரசு 30 கோடிக்கு அதிகமான யுவானை முதலீடு செய்துள்ளது. தற்போது, சின் ச்சியாங்கில் 250 பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கான பண்பாட்டுத் தொழில் நுட்ப பள்ளிகளின் எண்ணிக்கை 2000ஐத் தாண்டியுள்ளது. கிராமப்புறங்களில் 8000க்கு அதிகமான கிளைப்பள்ளிகள் உள்ளன. மேலும் 3 தேசிய நிலை மற்றும் 10 தன்னாட்சி பிரதேச நிலை வசிப்பிட கல்வி ஆய்வு மண்டலங்களும் உருவாக்கப்பட்டன. சின் ச்சியாங் முழுவதிலும் பரவல் செய்யப்பட்ட தொழிற்கல்வி, தொழிற் பயிற்சி வலைப்பின்னல் அமைப்புமுறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில் நுட்பப் பள்ளிகள் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு தொகுதி சிறப்பு தொழில் நுட்பமுடைய இளைஞர்களுக்குப் பயிற்சியளித்தது. தொழில் நுட்பத் திறமைசாலிகள் வேலைக்கு அம்ர்த்தப்படுவது பற்றிய நிலைமையும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கின்றன.

புதுமையான கல்வி அமைப்புமுறையை உருவாக்க பல்வேறு சின் ச்சியாங் தொழில் நுட்பக் கல்லூரிகளும் பள்ளிகளும் ஆக்கப்பூர்வமாகப் பாடுபட்டு வருகின்றன. கல்லூரிகள் அல்லது பள்ளிகளும் தொழில் நிறுவனங்களும் ஒத்துழைத்தல், தேவைப்படும் நிலைமையின் படி வகுப்பு நடத்துதல், பணியில் ஈடுபடும் அதேவேளையில், கல்வி பெறுதல் முதலிய கல்வி அமைப்புமுறைகளில் இவை ஈடுபட்டு வருகின்றன. கல்லூரிகளின் வகுப்புகளும், சந்தை மற்றும் வேலை வாய்ப்புகளின் தேவையுடன் நெருக்கமாக இணைக்கப்படுகின்றன. வேலை வாய்ப்பு சந்தை, தொழிற்கல்விக்கு வழிக்காட்டுகின்றது.

சின் ச்சியாங் மென் ரக தொழில் துறையின் தொழில் நுட்பக் கல்லூரி, சின் ச்சியாங் பொருளாதார ஏட்டுடன் ஒத்துழைத்து, செய்தி ஊடகக் கழகத்தை நடத்தியுள்ளது.உடன்படிக்கையின் படி, கழகத்தின் பட்டத்தாரிகள் இந்த செய்தியேட்டு நிறுவனத்தில் வேலை பெறுவதில் முதன்மை உரிமை கொண்டுள்ளனர். இவ்வாண்டு ஜுலை திங்களில் தேர்வில் வெற்றி பெற்ற 80க்கும் அதிகமான பட்டதாரிகள் சுமுகமாக வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். இந்தச் செய்தி ஏட்டின் தலைவரின் துணையாளரும், மனித வள ஆற்றல் பிரிவின் தலைவருமான wu hong ming கூறியதாவது

தற்போதைய செய்தி ஏட்டு சந்தையில், சிறப்பான திறமைசாலிகல் அம்ர்த்தப்படுவது கடினமாகவுள்ளது. எமது செய்தியேட்டு நிறுவனத்தில் பதிப்பாசிரியர், செய்தியாளர் ஆகிய பதவிகள்ர, விளம்பரம், வினியோகம் ஆகிய துறைகளில் வேவைப்படும் கோரிக்கை அதிகம். இதுவரை, எந்த கல்லூரிகளிலும் இந்தத் துறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதில்லை. ஆகையால், மென் ரக தொழி்ல் துறை கல்லூரியுடன் சோதனை முறையில் ஒத்துழைத்துள்ளோம். இந்த 80க்கு அதிகமான மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை பயிற்சி பெற்றனர். நாங்கள் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கின்றோம் என்றார் அவர்.

சின் ச்சியாங் தொழிற்கல்வி துறையில், கல்லூரிகளும் தொழில் நிறுவனங்களும் ஒத்துழைத்தல், பணிகளையும் கல்வியையும் இணைத்தல் முதலிய பல்வகை கல்வி அமைப்புமுறைகள் பரவல் செய்யப்பட்டுள்ளன. சின் ச்சியாங் போக்குவரத்து தொழில் நுட்பக் கல்லூரியும், சீனாவின் முதலாவது உந்து வண்டி கூட்டு நிறுவனத்தின் டோயோடா கிளையுடன் டோயோடா வகுப்பை நடத்தி, உந்து வண்டி தயாரிப்பு துறையிலான திறமைசாலிகளை உருவாக்குகின்றன. சான் ஜி தொழில் நுட்ப கல்லூரியும், சின் தௌ ஹேயர் குழுமத்துடன் ஹேயர் வகுப்பை நடத்துகின்றன. இத்தகைய ஒத்துழைப்பு நிகழ்ச்சிகள் திறமைசாலிகளின் வேலை வாய்ப்பையும் தொழில் நிறுவனத்தின் தேவையையும் இணைக்கும் கல்வி அமைப்புமுறையை உருவாக்கியுள்ளன.

இது பற்றி சின் ச்சியாங் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரியின் அலுவலகத் தலைவர் ZHU LI HONG கூறியதாவது

புதிய கல்வி அமைப்புமுறைகளின் மூலம், கூட்டாக பயன் பெறும் வாய்ப்புகளை உருவாக்கி, பள்ளிகளுக்கும் வேலை வாய்ப்பு சந்தைக்கும் இடையிலான தடைச்சுவரை நீக்கியுள்ளோம். எமது மாணவர்கள் 2வது ஆண்டின் பாட துணையில் பிற்பாதியில் தொழில் நிறுவனங்களில் பயிற்சி செய்யத் துவங்குகின்றனர். அவர்கள் பயிற்சி செய்யும் இடம் எதிர்காலத்தில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் இடமாகும் என்றார் அவர்.

இந்தக் கல்லூரி பெருநிலப்பகுதியின் ஏன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைத்து, உயர் தரத் திறமைசாலிகளைப் பயிற்றுக்கின்து. 2004ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இது மலேசியாவின் மிகப் பெரிய தனியார் கல்லூரியான ஸ்தாபுஃர் கல்லூரியுடன் ஒத்துழைத்து, சர்வதேச ஒத்துழைப்பு கல்லூரிக் கிளையை உருவாக்கியது. கடந்த ஜுன் திங்களில் 2வது தொகுதி சீன மாணவர்கள் பயிற்சி பெற மலேசியாவுக்குச் சென்றனர். ஸ்தான்புஃர் கல்லூரியின் வேந்தர் liang ming கூறியதாவது

ஸ்தான்புஃர் கல்லூரி ஹோட்டல் நிர்வாகத் துறையில் மலேசியாவில் மிகப் புகழ்பெற்றது. முதலாவது ஆண்டு பாட தவணையில் மலேசிய ஆசிரியர்கள் இங்கே வந்து பாடம் கற்று தருகின்றனர். 2வது ஆண்டு பாட தவணையில் சீன மாணவர்கள் மலேசியாவுக்குச் சென்று, உள்நாட்டு நிலைமை வளர்ச்சியின் படி, வேறுபட்ட துறைகளைத் தேர்ந்தெடுத்து பயிலலாம். அவர்களின் கல்வி தரம் 2 நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அவர்கள் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளலாம் என்றார் அவர்.

தவிர, மென்மேலும் வளர்ந்து வரும் சின் ச்சியாங் தொழிற்கல்வி வேறு பிரதேசங்களின் மாணவர்களை ஈர்த்துள்ளது. சின் ச்சியாங் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரியின் அலுவலகத் தலைவர் zhu li hong கூறியதாவது

2000ம் ஆண்டு, எமது கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை 2000 மட்டுமே. 2006ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 6000த்தைத் தாண்டியுள்ளது. நாட்டின் 24 மாநிலங்கள், நகரங்களிலிருந்து மாணவர்கள் இங்கே வந்து பயில்கின்றனர் என்றார் அவர்.