• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-10 15:41:52    
பயந்த பறவை

cri

போரிடும் நாடுகள் காலத்தில், மொத்தம் ஏழு நாடுகள் யார் பெரியவன் என்ற அதிகாரப் போட்டியில், ஆட்சி ஆதிக்க தாகத்தில் போரிட்டுக் கொண்டிருந்தன. காலப்போக்கில் 6 நாடுகள் ஒன்றாக சேர்ந்து, அவ்வமயம் மிக வலுவான ஆற்றல் கொண்டதாயிருந்த ச்சின் நாட்டுக்கு எதிராக, கூட்டணி அமைத்து சண்டையிட்டன. ஆக ச்சின் நாட்டு ஒரு பக்கம், அதற்கு எதிராக மற்ற ஆறு நாடுகள் மறுபக்கம் என மோதல் தொடர்ந்தது. 6 நாடுகள் ஒன்று சேர்ந்தன என்றாலும், நோக்கம் ஒன்றாக அதாவது ச்சின் நாட்டை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே கருத்தின் அடிப்படையில்தான் அணி தட்டுத்தடுமாறி நின்றது. எனவே இந்த கூட்டணியின் தலைவனான ஷாவ் நாட்டின் அரசன், ச்சு நாட்டுக்கு நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு தூதரை அனுப்பினான். தூதராக சென்ற அந்த நபரின் பெயர் வெய் ஜியா. இந்த தூதர் வெய் ஜியாவும் ச்சு நாட்டின் தலைமையமைச்சர் பிரபு ச்சுன்ஷென்னை சந்தித்தார். பேச்சுவாக்கில் ச்சு நாட்டுப் படைகளுக்கென தளபதியை நியமித்தாகிவிட்டதா என்று விசாரித்தார் ஷான் நாட்டின் தூதரான வெய் ஜியா. அப்போது ச்சு நாட்டு தலைமையமைச்சர் ச்சுன்ஷென் லின்வூ பிரபுதான் எங்களின் படைத்தளபதியாக இருக்கப்போகிறார் என்றார்.


உடனே வெய் ஜியா, அய்யா நான் சிறுவயதாக இருந்தபோது எனக்கு வில்வித்தை மிகவும் பிடிக்கும். நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன் என்றாராம். உடனே பிரபு ச்சுன்ஷென், பரவாயில்லை சொல்லுங்கள் என்று கூற, வெய் ஜியாவும் கதை சொன்னார்.
ஒருநாள் வெய் நாட்டு அரசன் அவனது படைத்தளபதி கெங்கோடு, வேட்டையாடுவதற்காக சென்றாராம். அந்த வேட்டையாடலினூடே, தளபதி கெங் அரசனிடம், அரசே வெறும் வில்லை மட்டும் கொண்டு என்னால் பறவையை வீழ்த்தமுடியும் என்று கூறினானாம். வெறும் வில்லை வைத்தா? அப்படியென்றால் அம்பை பயன்படுத்தமாட்டாயா? என்று கேட்டார் அரசர். ஆமாம் அரசே, அம்பு இல்லாத வில் மட்டும் கொண்டு, வேட்டையாடுவேன் என்றார் தளபதி கெங்.
பேசிக்கொண்டிருக்கையில் ஒரு காட்டு வாத்து மேலே பறந்து சென்றுகொண்டிருந்ததை கண்டான் தளபதி. உடனே தன்னுடைய் வில்லை எடுத்து, அம்பேதும் பொறுத்தாமல், பறவையை குறிவைத்து, வெறும் நாணை மட்டும் இழுத்து விட்டான் தளபதி. என்ன வியப்பு, என்னவோ அம்பேறி தைத்தது போல, பொத்தென கீழே விழுந்தது மேலே பறந்த அந்த வாத்து.


உடனே அரசன், வியப்பில், நம்பமுடியாத நிகழ்வு, எப்படி இதை செய்யமுடிந்தது உன்னால் என்று தளபதியிடம் வினவினார்.
அது ஏற்கனவே அம்பால் அடிப்பட்ட பறவை அரசே, அதனால் என் வேலை எளிதாகிவிட்டது என்றான் தளபதி. அது சரி உனக்கு அது அடிபட்டது எப்படி தெரியும்? என்று அரசன் விடாமல் கேட்க, அதற்கு தளபதி, அரசே அது தந்து கூட்டத்திலிருந்து பின் தங்கியிருந்ததையும், முனகலோடு பறந்ததையும் பார்த்தபோது, நிச்சயம் அது அடிப்பட்ட பறவையே என்று அறிந்துகொண்டேன். வெறும் வில்லை எடுத்து, நாணை ஏற்றி விட்டபோது, அந்த பறவை உண்மையில் அம்புதான் வருகிறது என்றெண்ணி, கடினத்தோடு உயரே பறந்து தப்பிக்க முயற்சித்தது. அந்த முயற்சியின்போது, ஏற்கனவே பட்ட காயம் மேலும் விரிந்துகொள்ள, நிலைகுலைந்து தரையில் விழுந்து மடிந்தது என்றான்.
கதை சொல்லிக்கொண்டிருந்த ஷாவ் நாட்டு தூதர் வெய் ஜியா, பிரபு ச்சுன்சென் அவர்களே, கதை இருக்கட்டும், நாம் முதலில் உரையாடிய செய்திக்கு இப்போது வருவோம், நீங்கள் சொன்ன படைத்தளபதி பதவிக்கான நபர் பிரவு லின்வூ ஏற்கனவே ஒருமுறை ச்சின் நாட்டு படைகளிடம் தோல்வி கண்டு திரும்பியவர். ஆக அவருக்குள் இன்னமும் கூட கொஞ்சம் பயமும் பீதியும் இருக்கக்கூடும். ஒருவேளை உங்கள் இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் லின்வூவை, படைத்தளபதி பொறுப்புக்கு நியமிக்க மாட்டேன் என்றாராம். ஆள் பார்த்து வேலை கொடுக்கவேண்டும் என்பதில் எவ்வளவு சூட்சுமங்கள் இருக்கின்றன பாருங்கள்.