|
சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன் பட்ட போட்டி
cri
2009ம் ஆண்டு சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன் பட்ட போட்டியின் சாங் சூ போட்டி 7ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஊ சீ நகரில் முடிவடைந்தது. வட அயர்லாந்து வீரர் மாக் ஐலாங் 6-0 என்ற ஆட்டக் கனக்கில் சீன வீரர் Ding Junhuiஐ தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்றார். தொழில் முறை ஆட்டங்களில், இவர் முதல் முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.
 2010ம் ஆண்டு வான்குவன் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தக் கூட்டத்தை சீனத் தேசிய விளையாட்டு ஆணையம் நடத்தியது. 2010ம் ஆண்டு வான்குவன் குளிர்காள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும். குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கோரிக்கை குறித்து, பல்வேறு பயிற்சி பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும் என்று சீனத் தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவர் லுயு பான் தெரிவித்தார்.
 2009ம் ஆண்டு சர்வதேச தொழில் முறை மேசை பந்து சுற்றுப் போட்டியின் சீன போட்டி 7ம் நாள் முடிவடைந்தது. ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீன வீரர் Ma Long 4-0 என்ற ஆட்ட கணக்கில் அவரது அணித் தோழர் Wang Liqinஐ தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்றார். மகளிர் ஒற்றையர் போட்டியில், சீன வீராங்கனை Liu Shiwen 4-2 என்ற ஆட்ட கணக்கில் அவரது அணி தோழி Guo Yueஐ தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்றார். தொழில் முறை ஆட்டங்களில், வெளிப்படையான போட்டியின் சாம்பியன் பட்டத்தை அவர் பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
 ஐரோப்பிய சிறிய நாடுகளின் 13வது விளையாட்டுப் போட்டி 7ம் நாள் பிரசல்ஸின் தலைநகரான நெக்சியாவில் முடிவடைந்தது. கடந்த 7 நாட்களில், ஐஸ்லாந்து, ஆங்தெர், லக்சம்பர்க், சாங்மாலினோ, மொரோக்கோ, மார்ட், Liechtenstein, செபுலுஸ் ஆகிய 8 ஐரோப்பிய சிறிய நாடுகளைச் சேர்ந்த 1000க்கு அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். 12 வகை விளையாட்டு நிகழ்ச்சிகளில் 409 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. உபசரிப்பு நாடான செபுலுஸ் 139 பதக்கங்களைப் பெற்று, பதக்க வரிசையில் முதலிடத்தை வகித்தது. ஐஸ்லாந்து 2வது இடத்தையும் லக்சம்பர்க் 3வது இடத்தையும் பெற்றன.
|
|