• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-11 09:40:07    
அழகான வூசி நகரம்

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நெருங்கி வரும் வேளையில், ஷாங்காயின் சுற்றுப்புற நகரங்கள், சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பும் இடங்களாக மாறியுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்காயின் மேற்கில் 128 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகான நகர் வூ சியைச் சென்று பார்க்கின்றோம்.

சியாங் சூ மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள வூ சி நகரம், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகவும், நவீனமயமாக்க தொழிற்துறை நகரமாகவும் இருக்கிறது. இது, 3000 ஆண்டுகால வரலாறுடையது. ஆண்டுதோறும் இந்நகரில் தங்கி, சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் பயணியரின் எண்ணிக்கை, கோடிக்கணக்காகும். பயணிகள் பகல்நேரத்தில் வூ சி நகரின் இயற்கைக் காட்சிகளையும் புகழ்பெற்ற தலங்களையும் பார்வையிட்டப் பிறகு, இந்நகரத்தின் மகிழ்ச்சியான இரவு வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புகின்றனர். அடுத்து, சுற்றுப்பயணம், உணவுவகைகள், பொருட்கள் வாங்குதல், விளையாட்டு ஆகிய துறைகளில், வூசி நகரத்தின் இரவு நேரப் பண்பாட்டு சுற்றுலா பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

லீ ஹு என்னும் ஆறு, வூசிவில் மிகப் பெரிய பூங்காவாகவும், நவீன இயற்கைக் காட்சி இடமாகவும் இருக்கிறது. நகரவாசிகளும், பயணிகளும், முழு நாளிலும் இலவசமாக இதைப் பார்வையிடலாம்.
உயர் அறிவியல் தொழில் நுட்ப வசதிகளையும், பல்வேறு வகை விளக்குகளையும் பயன்படுத்தி, லீ ஹு என்னும் ஆற்றின் கரையோர மலைகள், முக்கிய கட்டிடங்கள், பசுமையான சுற்றுச்சூழல் காட்சிகள் ஆகியவை, ஓளிமயமாக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் இரவு 7:30 மணிக்கு, நூறு மீட்டர் உயரமான நீரூற்று, அழகான நீர் காட்சிகளை வழங்குகிறது.

பசுமையான தாவரங்களில், லீ ஹுவிலுள்ள யூ புஃ தீவு வண்ண விளக்குகளால் அழகான காட்சியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிரேயுள்ள லூ திங் மலையில் வண்ண விளக்கு ஒளியுடன், தலைச்சிறந்த ஓவியமாக உருவாகியுள்ளது. இரவில் வீசும் சில்லென்ற காற்றில், லீ ஹு ஆற்றின் கரையில் நடக்கின்ற போது, பயணியர் இளைப்புக்கு ஆறுதல் உணர்வு கொள்கின்றனர். ஆற்றின் பக்கத்தில் வசிக்கின்ற சகோதரி Zhao, கூறியதாவது:
லீ ஹுயின் இரவு காட்சி மிகவும் அழகானது. குறிப்பாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒளி நன்றாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் நகரவாசி திரு Zhou அடிக்கடி இங்கே வருகை தருகின்றார்.
இங்கு நல்ல காற்றும் நல்ல சுற்றுச்சூழலும் உள்ளன. சாதாரண இரவிலும் இங்கு வந்து உலாவுகின்றேன். எமது நகரத்தில் இந்த அழகான இடம் உள்ளதால், நான் பெருமையடைகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

இரவு நேரப் பண்பாட்டுச் சுற்றுலா, சுவையான உணவுவகைகளுடன் நெருக்கமாக இணைக்கிறது. 2000ம் ஆண்டின் ஜனவரி திங்கள், வூசி நகரில், ச்சிங் சீ என்னும் வீதி, ஐரோப்பிய பாணியுடன் கட்டியமைக்கப்பட்டது. சில ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், இங்கு, வூசி நகரவாசிகளும் பயணிகளும் இரவில் உணவுகளைச் சாப்பிடும் நல்ல இடமாக மாறியுள்ளது. சீனாவின் பல்வேறு உணவுவகைகள் இவ்வீதியில் சுவைக்கப்படலாம்.