பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி
cri
கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஒன்றான பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி 7ம் நாள் பிரான்சில் முடிவடைந்தது. ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் பிரபலமான வீரர் Roger Federer 3-0 என்ற நேர் செட் கணக்கில் தன்னை எதிர்த்து ஆடிய தரவரிசையில் 23வது இடத்தில் உள்ள ஸ்வீடன் வீரர் Robin Soderlingஐ தோற்கடித்து, 2009ம் ஆண்டு பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
 தொழில் முறை ஆட்டங்களில், பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை Federer பெறுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஆடவர் பிரிவில் 14வது சாம்பியன பட்டத்தை அவர் பெற்றிருக்கின்றார். மேலும், டென்னிஸ் வரலாற்றில், அனைத்து முக்கிய போட்டிகளிலும் சாம்பியன் பட்டங்களை வெற்ற 6வது வீரராக அவர் மாறியுள்ளார்.
 2009ம் ஆண்டு இத்தாலி மேல்நிலை கால்பந்து போட்டியின் அமைப்புக் குழு 9ம் நாள் பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டம் நடத்தி, 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாளிரவு 8 மணிக்கு, சீனத் தேசிய விளையாட்டரங்கான பறவை கூட்டில் இந்த மேல்நிலை போட்டியை நடத்துவதாக அறிவித்தது. வெளிநாடுகளில், இத்தாலி மேல்நிலை கால்பந்து போட்டி நடைபெறுவது இது 4வது முறை. இத்தாலி கால்பந்து ஏ நிலை போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்ற Inter Milanஉம் இத்தாலி கோப்பை கால் பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்ற Lazioஉம் கால்பந்து போட்டியில் பேட்டியிடும்.
 Inter Milanஐ பொறுத்த வரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நடைபெற்ற ஆண்டு நிறைவு தருணத்தில், பறவைக் கூட்டில், இத்தாலி மேல்நிலை கால்பந்து போட்டியை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. Lazioஉடன் இணைந்து, சீன ரசிகர்களுக்கு திறமை வாய்ந்த போட்டி ஒன்றை அவர்கள் வழங்குவார்கள் என்று Inter Milan அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் Jose Mourinho தெரிவித்தார்.
|
|