
இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரை தொலைக்காட்சி பார்க்க செய்வதால் அவர்களின் அறிவு வளர்வதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டவிரும்பும் பெற்றோர் என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும். அவர்களோடு பேசி உரையாடி, கற்றுக்கொடுக்க வேண்டும். சைகைகளால் பரிமாறி அவர்களை பண்படுத்த வேண்டும். நல்லவை செய்யும்போது பாராட்டி, தீயவை செய்யும்போது அறியாமல் செய்வதால் கனிவோடு திருத்தி சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சாதராண நடைமுறைகள் தான் குழந்தைகளை பண்படுத்தி அவர்களின் மொழி, சொல் வளம், இதர சிறப்பு திறன்களை உயர்த்த உதவுகின்றன.
இன்று தந்தையும் தாயும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தால், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் முடங்கிபோகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தனக்கு தரவில்லையே என்று ஏங்கும் குழந்தைகள் வீட்டிலுள்ள தொலைக்காட்சி பெட்டியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுமளவுக்கு இன்றைய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொலைக்காட்சி பெட்டியின் முன் செலவிடும் நேரத்தை குழந்தைகளோடு செலவிட்டால், குழந்தைகளின் வளர்ச்சி நமக்கே புலப்படும். 1 2 3
|