• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-15 10:14:19    
பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதிப் போட்டி

cri
முடிவடைந்த மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ரஷிய வீராங்கனை Svetlana Kuznetsova 2-0 என்ற நேர் செட் கணக்கில் இப்போட்டியின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவரது சக நாட்டவர் Dinara Safinaஐ தோற்கடித்து, 2009ம் ஆண்டு பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவர் பெற்ற முதல் பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் இதுவாகும். 5 ஆண்டுகளுக்கு பின், கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளின் 2வது சாம்பியன் பட்டத்தை அவர் பெறுகின்றார்.

தவிர, 7ம் நாள் முடிவடைந்த ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், இப்போட்டியின் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள செக் குடியரசு வீரர் Lukas Dlouhy, இந்திய வீரர் Leander Paes இருவரும் 2-1 என்ற நேர் செட் கணக்கில் தங்களை எதிர்த்து ஆடிய தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையை தோற்கடித்து, 2009ம் ஆண்டு பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர். இதன் மூலம் Paes 3ஆம் முறையாக இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெறுகின்றார். தொழில் முறை ஆட்டங்களில், கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளின் இரட்டையர் ஆடவர் பிரிவின் சாம்பியன பட்டத்தை அவர் 5வது முறையாக பெறுகின்றார்.
5ம் நாள் முடிவடைந்த மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில்,

இப்போட்டியின் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனைகளான garrigues, Pascual இருவரும் 2-0 என்ற நேர் செட் கணக்கில் இப்போட்டியின் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள பெலாரஸ்-ரஷிய இணையை தோற்கடித்து, 2009ம் ஆண்டு பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சாங் சூ மாநிலம் ஏப்ரல் திங்கள் ஆசிய கோப்பை கால்பந்து கூட்டமைப்பிடம் 2010ம் ஆண்டு மகளிர் கோப்பை கால்பந்து கோட்டி பெறும் விண்ணப்பத்தை முன்வைத்தது. ஆசிய கோப்பை கால்பந்து கூட்டமைப்பின் போட்டி ஆணையத்தின் பிரதிநிதிகள் 6ம் நாள் சாங் சூ மாநிலம் மீது சோதனை மேற்கொள்ள துவங்கினர். 2010ம் ஆண்டு மே 19ம் நாள் முதல் 30ம் நாள் வரை, இந்த ஆசிய மகளிர் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும். சீனா, தென் கொரியா, வட கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இப்போட்டியில் கலந்துகொள்ளும்.

2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய பிரதேச தேர்வாட்டம் 6ம் நாளிரவு தொடர்ந்து நடைபெற்றது. ஏ பிரிவில், ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெக்ஸ்தான் அணியை தோற்கடித்தது. உலகில், தேர்வாட்டத்தின் இறுதிகட்டப் போட்டியில் நுழையும் வாய்ப்பை பெறுவதாக இது மாறியுள்ளது. அடுத்த போட்டிகளில், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகியவை 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிகட்ட தேர்வாட்ட போட்டியில் நுழைந்துள்ளன.
தவிர, தென் அமெரிக்க பிரதேச தேர்வாட்டத்தின் 13வது சுற்று போட்டிகளில், பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் Uruguay அணியை தோற்கடித்தது. அர்ஜென்டீன அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பிய அணியை தோற்கடித்தது.
தற்போது, 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தென் அமெரிக்க பிரதேச தேர்வாட்டத்தின் தர வரிசையில் பிரேசில் முதலிடத்தை பெறுகின்றது. அர்ஜென்டீனா 4வது இடத்தை பெறுகின்றது.