• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-16 10:31:29    
இன்னொரு சுவையான உணவு வகை

cri
க்ளீட்டஸ் – உணவுப் பண்பாடு, ஒரு நாட்டின் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றது. உணவு வகைகள், தயாரிப்பு வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் அந்த நாட்டின் மக்களது வாழ்க்கையை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
வாணி – ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் தங்களுக்கு இன்னொரு சுவையான உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – சரி,

வாணி – நாம் அனைவரும் அறிந்தது போல், சீனா ஒரு பெரிய நாடாகும். வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் கோதுமை உணவு வகைகளையும் ஆட்டு மாட்டு இறைச்சி வகைகளையும் சாப்பிட விரும்புகின்றனர். தென் பகுதியிலுள்ள மக்களின் விருந்தில் அரிசிச்சோறு, நீர் வாழ் உயிரினங்கள் முதலியவற்றால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் அதிகம்.
க்ளீட்டஸ் – வாணி, இன்றைய நிகழ்ச்சியில் எந்த வகை உணவு பற்றி கூறி இருக்கின்றோம்?
வாணி – மீன் இறைச்சி கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை பற்றி கூறுகின்றோம். முதலில், தேவையான பொருட்களைக் கூறுகின்றேன்.


மீன் இறைச்சி 200 கிராம்
உலர்ந்த ரோட்ட்த்தூள் 100 கிராம்
வெள்ளை மிளகு தூள் ஒரு தேக்கரண்டி
உலர்ந்த தக்காளி மாவு 2 தேக்கரண்டி
உணவு எண்ணெய் 300 மில்லி லிட்டர்
உப்பு ஒரு தேக்கரண்டி
சர்க்கரை ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
க்ளீட்டஸ் – வாணி, இன்று அதிக அளவுடைய உணவு எண்ணெயை பயன்படுத்தப்போகின்றோம். 300 மில்லி லிட்டர் எண்ணெய் முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டுமா?

வாணி – இன்றைய உணவு வகை சுண்டல் போல் வறுக்கப்பட்டு தயாரிக்கப்பட வேண்டும். ஆகையால், முதலில் அதிக அளவிலான உணவு எண்ணெய் தேவைப்படும். ஆனால், நடைமுறையில் 20 மில்லி லிட்டர் அளவு பயன்படுத்தப்படும்.
க்ளீட்டஸ் – சரி.
வாணி – முதலில், மீனை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் தோலையும் முள்ளையும் நீக்க வேண்டும். குறிப்பாக, மீனின் வயிற்றின் உள்ளே இருப்பதை முற்றிலும் நீக்க வேண்டும்.
க்ளீட்டஸ் – சரியான கருவி மூலம், மீன் இறைச்சியை மாவாக்க வேண்டும். உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகு தூள், நல்லெண்ணெய் ஆகியவற்றை இதில் சேர்த்து, நன்றாக கிளற வேண்டும்.
வாணி – பிறகு, அப்படியே 20 நிமிடங்கள் இருக்க விடுங்கள்.
பிறகு சுத்தமான கைகளால், மீன் இறைச்சியை மேசை பந்து அளவிலான பந்துகளாக உருட்டிக்கொள்ளுங்கள். அவற்றின் மேலே ரொட்டி தூளில் தேய்த்து மேலே ஒட்டிக்கொள்ள செய்யுங்கள். பிறகு, மீன் இறைச்சி பந்துகளை கைகளால், பஜ்ஜி போல் தட்டிக் கொள்ளுங்கள்.

க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில் உணவு எண்ணெயை ஊற்றவும். பெரிய சூட்டில் மீன் இறைச்சி பஜ்ஜிகளைத் தனித்தனியாக போட்டு, வறுக்கவும். சுமார் அரை நிமிடத்துக்குப் பின், மெதுவான சூட்டுக்கு மாற்றவும்.
வாணி – ஒரு பக்கம் பொன் நிறமாக மாறிய பின், மறுபக்கமாக திருப்பி, தொடர்ந்து வறுக்கவும். இரண்டு பக்கங்களும் பொன் நிறமாகிய பின், வெளியே எடுக்கலாம்.
க்ளீட்டஸ் – இன்றைய மீன் இறைச்சி பஜ்ஜி தயார். மக்காச்சோள மாவுடன் சேர்த்து சாப்பிட்டால், மேலும் சுவையானது.

வாணி – பொதுவாகக் கூறின், சிறுவர் சிறுமியர் எண்ணெயால் வறுக்கப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிட மிகவும் விரும்புகின்றனர்.
க்ளீட்டஸ் – நானும் அவற்றைச் சாப்பிட விரும்புகின்றேன்.
வாணி – அப்படியா? அவை நல்ல சுவை தான். ஆனால், பெரியவர்களைப்ப் பொறுத்த வரை, அவற்றையும் இனிப்புகளையும் அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்காது. கட்டுப்படுத்த வேண்டும்.
க்ளீட்டஸ் – நீங்கள் சொன்னது சரி. நாம் அதிக காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.