• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-17 15:39:10    
யீவு நகரில் துருக்கி வணிகர் Bakir Ceylanஇன் வாழ்க்கை

cri
தற்போது, யீவு நகரில், சுமார் 200 கூட்டு நிறுவனங்கள் இத்தகைய வர்த்தகச் சேவையை வழங்குகின்றன. வணிகப் பொருட்களின் சேகரிப்பு மற்றும் வினியோக மையமாக, யீவு நகரின் சந்தையில் அனைத்து வணிகப் பொருட்களும் சேகரிக்கப்படுகின்றன. கொள்வனவுச் செலவு மற்றும் நேரத்தை இது பெரிதும் சிக்கனப்படுத்துகிறது. Bakir Ceylan எடுத்துக்கூறியதாவது:

"யீவுவில், வாடிக்கையாளர் வாங்க விரும்பும் அனைத்து பொருட்களையும் கொள்வனவு செய்யலாம். கடந்த திங்கள், எனது வாடிக்கையாளர் ஒருவர் இங்கு வந்தார். ஒரே நாளில், 500 கடைகளுக்குச் சென்றோம். முன்பு குவாங்சோவில் மூன்று நாட்களில், இரண்டு தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே செல்ல முடியும்" என்றார், அவர்.

யீவு நகர், மிகப் பெரிய பேரங்காடி போல் இருக்கிறது. 40 லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய வணிக வர்த்தக மண்டலத்தில், மொத்தம் 62 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. இக்கடைகளில் 40 ஆயிரத்துக்கு அதிகமான பொருள் வகைகள் உள்ளன. நாள்தோறும், சுமார் 2 லட்சம் பேர், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து இங்கே வந்து கொள்வனவு செய்கின்றனர். சந்தை நிலைமை பற்றி Bakir Ceylan நன்றாக அறிந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:

"யீவு நகரில் நகை தொழிற்துறை மிகவும் செழிப்பாக இருக்கிறது. யீவு மற்றும் குவாங் சோ, சீனாவின் இரண்டு மிகப் பெரிய நகை சேகரிப்பு மற்றும் வினியோக மையமாக திகழ்கின்றன. இருந்த போதிலும், குவாங் சோ சந்தையில் விற்கப்படும் பல நகைகள், யீவு நகரிலிருந்து வருபவையே. இப்பொருட்கள், யீவு நகரில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன, அல்லது யீவுவின் தொழில் சின்னங்களைப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட ஓர் அளவில் கூறினால், யீவுவின் நகைகள், சீனாவின் பல்வேறு இடங்களின் சந்தையில் செவ்வனே விற்கப்பட்டுள்ளன. தவிர, யீவுவில் தயாரிக்கப்படும் எழுது பொருட்கள், நெசவுப் பொருட்கள், பெட்டிகள், பைகள், விளையாட்டுப் பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு பெரும் போட்டியாற்றல் உள்ளது" என்றார், அவர்.

புள்ளி விபரங்களின் படி, சுமார் பத்து ஆயிரம் வெளிநாட்டவர்கள் யீவுவில் தங்கியிருக்கின்றனர். பணியின் காரணமாக, அவர்கள் யீவுவில் வாழ்கின்றனர். பணியில், Bakir Ceylanனும் ஒரு சீன மங்கையும் காதல் கடலில் மூழ்கியிருக்கின்றனர்.

எதிர்காலத்தில், தமது குடும்பத்தினரை யீவு நகருக்குக் கொண்டு வர Bakir Ceylan திட்டமிட்டுள்ளார். அவரது தாய் யீவு நகரில் 6 திங்களாக தங்கியிருக்கின்றார். அவர் இங்குள்ள வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுள்ளார். யீவுக்கு வந்து, தன்னுடன் கூட்டு நிறுவனத்தை கூட்டாக நிர்வகிக்குமாறு சிங்கப்பூரில் வேலை செய்யும் தமது தம்பியை அவர் வற்புறுத்தியுள்ளார்.

யீவு நகரில், வெளிநாட்டவர், சீனர்களை திருமணம் செய்வது மிகவும் சாதாரணமானது. வீட்டுக்கு வெளியே வெளிநாட்டவர்களின் வாழ்க்கைக்கும், உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்குமிடையே பெரிய வேறுபாடு ஏதும் காணப்படவில்லை. ஆனால் வீடு திரும்பிய பின், தனிச்சிறப்பு மிக்க ஒரு சிறு சமூகத்தில் அவர்கள் வாழ்கின்றனர். தமது வீட்டில், துருக்கி பாணி வாழ்க்கையை Bakir Ceylan அனுபவிக்கின்றார். இருப்பினும், நாடு கடந்த திருமணம், உள்ளூர் வாழ்க்கையில் சேருவது எளிதானது. Bakir Ceylan கூறியதாவது:

"கணவர், மனைவி ஆகிய இருவருக்கிடையே கருத்து பரிமாற்றத்தில் பிரச்சினை இல்லை என்றால், பல பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும். நானும் குடும்பத்தினரும் உட்கொள்ளும் உணவு வகைகளின் வேறுபாடு மட்டுமே பிரச்சினையாகும். துருக்கி மக்கள், உள்ளூர் சமூகத்தில் விரைவாக சேர முடியும். ஏனென்றால், சீனா, துருக்கி ஆகிய இரு நாடுகளின் உணவு வகைகளும் சரி, இதர வாழ்க்கை பழக்க வழக்கங்களும் சரி, நெருங்கிய தொடர்புள்ளவை" என்றார், அவர்.