• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-17 15:38:59    
தலைமையமைச்சர் யான் யிங் 1

cri

எந்த ஒரு அரசனுக்கும், அறிவுரைகள் சொல்லவும், திட்டமிடலில் ஆலோசனை வழங்கவும் துணை நிற்பவர்கள் அமைச்சர்கள். அரசியலில் மக்களுக்கும், நாட்டின் பெருமைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசன் ஆட்சி செய்ய ஊன்றுகோலாய் அருகிருந்து உதவுபவர்கள் அமைச்சர் பெருமக்கள். சிறந்த ஒரு தலைமை அமைச்சனும், அமைச்சர் குழாமும் கிடைத்துவிட்டால், போரில் வெற்றி பெற்று வீரபராக்கிரமசாலியாக திகழ்வது மட்டுமல்லாது, குடி செழிக்க ஆட்சி நடத்தி, வரப்புயர என புலவர்கள் பாடும் அளவுக்கு மாட்சி பெறவும் ஒரு அரசனால் முடியும், இதை வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. அந்த வகையில் சீன வரலாற்றில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கன்ஃபியூசியஸ் வாழ்ந்த காலத்தில், ச்சி நாட்டின் தலைமையமைச்சராக இருந்து புகழ் பெற்றவரான யான் யிங் குறிப்பிடத்தக்க ஒருவர். அவரது அறிவாற்றல், நகைச்சுவையுணர்வு, மதிநுட்பம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் சில கதைகள் உங்களுக்காக.


ச்சி நாட்டின் தலைமையமைச்சராக நியமிக்கப் படுவதற்கு முன், துங்கே மாநிலத்தின் ஆளுனராக இருந்தார் யான் யிங். அவர் ஆளுனராக இருந்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு பின், அவருக்கு எதிராக பெரும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அவர் மீதான விருப்பமின்மையும், அவருக்கு எதிராக எழுந்த குரலொலியும் கோமகன் ஜிங்கின் காதுகளை எட்டின. எனவே கோமகன் ஜிங், துங்கேவின் ஆளுனர் பதவியிலிருந்து யான் யிங்கை நீக்க முடிவெடித்தார்.
இதை அறிந்த யான் யிங், கோமகன் ஜிங்கிடம், மேன்மை தங்கிய கோமகனே, இப்போது என் தவறுகள் என்னவென்று எனக்கு புரிந்துவிட்டது. என்னை இன்னும் மூன்று ஆண்டுகாலம் துங்கேவின் ஆளுனராக இருக்கவிட்டால் நான் நிச்சயம் முன்னேற்றத்தை காட்டுவேன் என்று கூறினாராம்.
யான் யிங்கின் கோரிக்கையை கோமகனும் ஏற்றுக்கொண்டார். மூன்றாண்டுகள் உருண்டோடின. ஆளுனர் யான் யிங்கிற்கு எதிராக கொடி பிடித்தோரும், ஆர்பாட்டங்கள் நடத்தியோரும் அவரை இப்போது புகழ்ந்து பாராட்டினர். யான் யிங்கை பற்றிய எதிர்ப்புக்குரலை கேட்ட கோமகன் ஜிங்கின் காதுகளுக்கு இப்போது யான் யிங்கை பற்றிய புகழுரையே கேட்டது. உடனே யான் யிங்கை அழைத்து துங்கே மாநிலத்துக்கு அவர் ஆற்றிய சேவைக்காக பரிசளிக்க விரும்பினார் கோமகன்.