• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-18 09:58:22    
வூசி நகரில் இரவுநேர சுற்றுப்பயணம்

cri
பயணிகள், வூசியின் உள்ளூர் சிற்றுண்டிகளைச் சுவைப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள், பெய்தாங் வீதிக்கு செல்வது உறுதி. பெய்தாங் வீதி, பண்டைய கால்வாய் ஆற்றின் பக்கத்தில் அமைந்துள்ளது. 680 மீட்டர் நீளமான இவ்வீதியில், மொத்தம் 120 சிற்றுண்டி அங்காடிகள் உள்ளன. ஒரு மிக பெரிய வணிக வளாகம் போன்ற இடத்தில் பல உணவகங்கள் ஒன்றாக இருப்பதை தான், சிற்றுண்டி அலங்காடிகள் என்கிறோம். வூ சி நகரத்தின் தனிச்சிறப்பியல்பான சிற்றுண்டிகளைச் சுவைக்கும் போது, பயணிகள், பண்டைய கால்வாய் ஆற்றின் இரவு காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.

இரவில், பொருட்களை வாங்க விரும்பினால், சுங்சான் வீதிக்குச் செல்ல வேண்டும். வூசி நகரத்தின் சுங்சான் வீதி, சீனாவில் மொத்த விற்பனை அளவில் 7வது இடத்தை வகித்த வணிக வீதியாகவும், உள்ளூர் நகரவாசிகளால் வரவேற்கப்பட்ட பொருட்களை வாங்குகின்ற இடமாகவும் இருக்கிறது. பகல் நேர கெடுபிடிகள், இரவில் காணப்படுவதில்லை. விசாலமான பாதை, பசுமையான மரங்கள், பாதையின் இருப் பக்கங்களிலுல்ள கடைகள் முதலியவை இணைந்து, அழகான இரவு காட்சிகளை உருவாக்குகின்றன. சுங்சான் வீதியில் உலாவும் போது பொருட்களை வாங்கலாம் என்று நகரவாசிகள் எமது செய்தியாளரிடம் கூறினர்.

சுங்சான் வீதி, வூசி நகரின் செழுமைமிக்க பகுதியாகும். இங்கு காணப்படும் பொருட்களின் வகைகள் மிகவும் அதிகம். பொருட்கள் கடைகளில் நிறைந்து காணப்படுகின்றன என்று நகரவாசி ஒருவர் தெரிவித்தார்.
புகழ்பெற்ற பேரங்காடிகள் மட்டுமல்ல, தனிச்சிறப்பான சிறிய கடைகளும் இவ்வீதியில் மிகவும் அதிகம். பரவலான வணிகப்பொருட்கள், இனிமையான இசை, உற்சாகமான சேவை ஆகியவை, ஏராளமான பயணிகளை ஈர்க்கின்றன.

வூசி நகரவாசிகளின் இரவு விளையாட்டு பொழுதுபோக்கில் கலந்து அனுபவம் பெற வேண்டுமென்றால், தேய் ஹு சதுக்கத்துக்குச் சென்று பார்க்கலாம். மழை பெய்யாமல் இருந்தால், நாள்தோறும் இரவு உணவுக்குப் பிறகு இச்சதுக்கத்தில் உலாவுவது, நகரவாசிகள் பலரின் வழக்கமாக மாறியுள்ளது. ஒவ்வொரு இரவிலும், தேய்ஹு சதுக்கம் மிகவும் கோலாகலமாக காண்படுகிறது. சிலர், சக்கர சறுக்கல் விளையாடி, மேலும், பல முதியோர் நாடகத்தை பாடி, ஆடுகின்றனர்.
வூசி நகரில் இரவுப் பண்பாட்டு சுற்றுலா மேற்கொள்ளக் கூடிய இதர இடங்கள் மிகவும் அதிகம். சொங் ஆன் கோயில், நான் சான் கோயில், ஹு பின் என்னும் மதுவக வீதி முதலியவை, நல்ல தேர்வுகளாகும். இப்பொழுது,

இரவுப் பண்பாட்டுச் சுற்றுலாவின் சின்னங்கள், நெறிகள், பிரச்சார மேடை, திட்டப்பணிகளின் வடிவமைப்பு ஆகியவற்றில், வூசி நகரம் வரைவு திட்டங்களை வகுத்து வருகிறது. கலைநிகழ்ச்சி, சதுக்கப் பண்பாடு, பொழுதுபோக்கு விளையாட்டு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, இணைய உலாவகங்கள் உள்ளிட்ட மூலவளங்களைப் பகிர்ந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்தி, கொள்கை ஆதரவு அளவைப் பெருக்கி, இந்நகரத்தின் இரவுப் பண்பாட்டுச் சுற்றுலாவை வளர்க்க முயற்சி செய்து வருகிறது.