• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-19 09:45:58    
2009 உலக கால்பந்து சம்மேளனத்தின் கூட்டமைப்பு கோப்பை

cri
2009ம் ஆண்டு உலக கால்பந்து சம்மேளனத்தின் தென் ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டி 15ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. B பிரிவின் போட்டிகளில், பாரம்பரிய வலிமைமிக்க பிரேசில் மற்றும் இத்தாலி அணிகள், போட்டிகளில் கலந்துகொண்டன. பிரேசில் அணி, 4-3 என்ற கோல்கணக்கில், சிறப்பாக விளையாடிய ஆப்பிரிக்க சாம்பியன் எகிப்த் அணியை தோற்கடித்தது. இத்தாலிய அணி, 3-1 என்ற கோல்கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்தது.

2009ம் ஆண்டு சிங்கப்பூர் பூப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியின் இறுதிபோட்டிகள் 14ம் நாள் நடைபெற்றன. சீன வீரர் பாவ் சுன் லை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். சாவ் திங் திங், சாங் யா வென் இணை, சேன் போ, மா சின் இணை, மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிகளில் வெற்றியடைந்து, சாம்பியன் பட்டம் பெற்றன.
பெய்ஜிங் நேரப்படி, 16ம் நாள் விடியற்காலை, 6 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகை கொண்ட ஈஸ்ட்போன் டென்னிஸ் போட்டியின் முதல் நாளைய போட்டி முடிவடைந்தது. மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் சீன வீராங்கனை சேன் ச்சி 2-0 என்ற ஆட்டக்கணக்கில், ஸ்பானிய வீராங்கனை கார்லா நாவரோவை தோற்கடித்து, முதல் 16 இடங்களில் நுழைந்தார்.
2009ம் ஆண்டு பிர்மிங்ஹம் மகளிர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் கனவை, சீன வீராங்கனை லி நா நனவாக்கவில்லை. பெய்ஜிங் நேரப்படி 15ம் நாள் முடிவடைந்த இறுதிப்போட்டியில் அவர், 0-2 என்ற ஆட்டகணக்கில் ஸ்லோவாக்கிய வீராங்கனை ரிபாரிகோவாவிடம் தோல்வியடைந்தார். இப்போட்டியில் அவர் 2வது இடத்தை பெற்றார்.

14ம் நாள் முடிவடைந்த 2009ம் ஆண்டு ஆசிய ஆடவர் கூடைப்பந்து போட்டியின் கிழக்காசிய பகுதியின் தேர்வு போட்டியில் தென்கொரியா 68-58 என்ற புள்ளிகணக்கில் ஜப்பானை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றது. சீன அணி, 107-90 என்ற புள்ளிகணக்கில் சீன தைபெய் அணியை தோற்கடித்து 3வது இடம் வகித்தது.
பெய்ஜிங் நேரப்படி, 15ம் நாள் 2009ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து மகளிர் கைப்பந்து போட்டி முடிவடைந்தது. சீன அணி, 3-0 என்ற ஆட்டக்கணக்கில் நெதர்லாந்து அணியை தோற்கடித்து, 3வது இடம் வகித்தது. இறுதிப்போட்டியில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரேசில் அணி, 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இத்தாலி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றது.

2009ம் ஆண்டு உலக கால்பந்து சம்மேளனத்தின் தென் ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டி 15ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. B பிரிவின் போட்டிகளில், பாரம்பரிய வலிமைமிக்க பிரேசில் மற்றும் இத்தாலி அணிகள், போட்டிகளில் கலந்துகொண்டன. பிரேசில் அணி, 4-3 என்ற கோல்கணக்கில், சிறப்பாக விளையாடிய ஆப்பிரிக்க சாம்பியன் எகிப்த் அணியை தோற்கடித்தது. இத்தாலிய அணி, 3-1 என்ற கோல்கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்தது.