கடந்த சில ஆண்டுகளில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மணற்பாங்கான நிலப்பரப்பு, ஆண்டுக்கு ஏறக்குறைய 40ஆயிரம் ஹெக்டர் என்ற நிலையில் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, தற்போது, மணற்பாங்கான நிலக் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு பற்றிய பன்நோக்க அமைப்பு முறையை திபெத் உருவாக்க பாடுபடுகின்றது.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வனத்தொழில் ஆணையகத்திலிருந்து இத்தகவல் கிடைத்துள்ளது
கடந்த சில ஆண்டுகளில், மீள் வனமயமாக்கம், காடு மற்றும் மேய்ச்சல் தளப் பாதுகாப்பு முதலிய நடவடிக்கைகளின் மூலம், திபெத்தில் மேம்படுத்தப்பட்ட பல்வகை மணற்பாங்கான நிலப்பரப்பு, 40ஆயிரம் ஹெக்டரை தாண்டியுள்ளது. தற்போது, 5கோடி யுவானுக்கு மேலான ஒதுக்கீடு செய்யப்பட்ட திபெத்தின் தென் கிழக்குப் பகுதியில் மணற்காற்றுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டப்பணி துவங்கியுள்ளது. சிங்காய்-திபெத் பீடபூமியில் இயற்கைச் சூழல் பாதுகாப்புக் கட்டுமானத்தை இது முன்னேற்றும்.
|