• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-22 18:26:14    
சீனாவின் மருத்துவ அமைப்புமுறையின் சீர்திருத்தம்

cri

இந்த அமைப்புமுறையின் பரவல் தொடர்ந்து விரிவாக்க வேண்டும் என்று புதிய மருத்துவ சீர்திருத்தம் உறுதியாக முன்வைத்தது. சீன மனித வள மற்றும் சமூக உத்தரவாத ஆணையத்தின் துணை அமைச்சர் huxiaoyi கூறியாதவது:

அடுத்த 3 ஆண்டுகளில், மருத்துவ உத்தரவாத அமைப்புமுறையில், அனைவரையும் சேர்க்க, சீனா பாடுபடும். தற்போதைய அடிப்படை மருத்துவ காப்புறுதி அமைப்புமுறையின் உத்தரவாத நிலையை மேம்படுத்த வேண்டும். மேலும், அடிப்படை மருத்துவ உத்தரவாத நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

புதிய மருத்துவ அமைப்புமுறையை உருவாக்கும் வகையில், அரசு சாரா மூலதனத்தை ஈர்த்து, இலாபமற்ற மருத்துவமனைகளைக் கட்டியமைப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்த புதிய மருத்துவ சீர்திருத்தம் முன்மொழிந்தது. இது குறித்து, பெய்ஜிங் மாநகரிலுள்ள மருந்துக் கடை ஒன்றின் பொது மேலாளர் guobo கூறியதாவது:

அரசு சாரா மூலதனத்தை பயன்படுத்தி, மருத்துவமனைகளை நடத்த, சீன அரசு, ஆக்கப்பூர்வமாக ஊக்குவித்து, வழிக்காட வேண்டும். இதன் மூலம், சில மருத்துவ பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றார் அவர்.

புதிய மருத்துவ சீர்திருத்தத்தின் மூலம், மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையிலிருந்து, சீன மக்கள் மேலதிகமான உத்தரவாதத்தை பெற முடியும். இது மக்களின் கவலையை நீக்குவதற்கு துணை புரியும். அதுமட்டுல்ல, நுகர்வு விருப்பத்தை ஊக்குவித்து, உள்நாட்டுத் தேவையை விரிவாக்கி, பொருளாதார வளர்ச்சியையும் விரைவுபடுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனப் பொருளாதார ஆய்வகத்தின் துணைத் தலைவர் liling அம்மையார் கூறியதாவது

மருத்துவ சிகிச்சை பெறுவது கடினம், சிகிச்சைச் செலவு அதிகம் முதலிய பிரச்சினைகளை, புதிய மருத்துவ சீர்திருத்தம் தீர்க்க வேண்டும். அதேவேளையில், பொது மக்களின் உடல் நலத்தை உத்தரவாதம் செய்வது, பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் துணை புரியும். மருத்துவ சிகிச்சைக்கான நிதியை அதிகரிப்பது, உள்நாட்டுத் தேவையை விரிவாக்கும் ஒரு வழிமுறையாகும். பொது மக்களின் உடல் நலத்தை உத்தரவாதம் செய்தால், மருத்துவ செலவு குறையும். இது, மேலதிகமான நுகர்வை ஊக்குவிக்கும். அது, சீன உள்நாட்டுத் தேவையை விரிவாக்கி, பொருளாதாரம் சீராக வளர்வதை முன்னேற்றும் என்று அவர் தெரிவித்தார்.


1 2