• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-22 09:58:03    
2009 சர்வதேச தடகள சம்மேளனத்தின் தங்க லீக் போட்டிகள்

cri
14ம் நாள் பெர்லின் நகரில், 2009ம் ஆண்டு சர்வதேச தடகள சம்மேளனத்தின் தங்க லீக் போட்டிகள் 14ம் நாள் துவங்கின. மகளிர் கோலூன்றி உயரம் தாண்டுதல் போட்டியில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இசின்பாயைவா, 4.83 மீட்டர் என்ற சாதனையை கொண்டு, சாம்பியன் பட்டம் பெற்றார். தவிரவும், பிரிட்டன் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள், தொடர் ஓட்டப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களை பெற்றன.

11 ஆண்டுகளுக்கு முன், சர்வதேச தடகள சம்மேளனத்தின் தங்க லீக் உருவாக்கப்பட்டது. 2010ம் ஆண்டு முதல், இப்போட்டிக்கு பதிலாக வைரக்கல் லீக் உருவாக்கப்படும். இப்போட்டியில் 12 நிலைய போட்டிகள் அடங்கும். முழு ஆண்டில், அனைத்து போட்டிகளிலும் சாம்பியன் பெற்றவர், 4 காரெட் கொண்ட வைரக்கலை பெறுவார் என்று சர்வதேச தடகள சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்முரமான வாரத்தை சர்வதேச ஒலிம்பிக் குழு வரவேற்கும். 2016ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் எந்த விளையாட்டைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்ய சர்வதேச ஒலிம்பிக் குழு சில விளையாட்டுகளின் அறிக்கைகளை கேட்டறியும். 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 26 விளையாட்டுகள் அடங்குகின்றன. 2016ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 2 விளையாட்டுகள் அதிகரிக்கும். அடிப்பந்தாட்ட போட்டி, மென்பந்தாட்டம், ரக்பி என்னும் கால் பந்தாட்டம், குழி பந்தாட்டம், கோல், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகள், 2016ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்படும் வாய்ப்பு உண்டு.

பெய்ஜிங் நேரப்படி 15ம் நாள் முடிவடைந்த NBA கூடைப்பந்து இறுதிபோட்டியின் 5வது ஆட்டத்தில் LOS ANGELES LAKERS அணி, 99-86 என்ற புள்ளிகணக்கில், ORLANDO MAGIC அணியை தோற்கடித்தது. மொத்தமாக 7 ஆட்டங்களில் அதிக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 4-1 என்ற ஆட்டக்கணக்கில், ORLANDO MAGIC அணியை தோற்கடித்த, LAKERS அணி சாம்பியன் பட்டம் பெற்றது. வரலாற்றில் LOS ANGELES LAKERS அணி பெற்ற 15வது சாம்பியன் பட்டம், இதுவாகும்.