• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-23 14:56:53    
சீன வேளாண்மையின் வளர்ச்சி

cri

சீன வேளாண்துறையின் வளர்ச்சியை 6 கட்டங்களாக பிரிக்கலாம்.

வளர்ச்சியடையாத நிலை, தொடக்க நிலை தொடங்கி முன்னேறிய முனைப்பான நிலை வரையான இந்த 6 கட்டங்கள் வரலாற்றின் பல்வேறு

காலக்கட்டங்களில் பதிவாகியுள்ளன.

முதல் கட்டம்:

4000 முதல் 10000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலம் சீன வேளாண்துறை வளர்ச்சியடையாத நிலை அல்லது கட்டம் எனக் கூறப்படுகிறது. நியோலித்திக் ஏஜ் எனப்படும் புதிய கற்காலமாக கூறப்படும் இக்காலத்தில், சீன வேளாண் துறை பறித்தல் மற்றும் பிரித்தல், வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தலின் அடிப்படையில் வளர்ந்தது. வேளாண்மையின் தோற்றம் அல்லது வெளிப்பாடு, மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது.

இரண்டாவது கட்டம்:

கிமு 2100 முதல் கிபி 771 ஆம் ஆண்டு வரையான ஷியா, ஷாங் மற்றும் ஷோ வம்சக்காலங்கள் அடங்கியது வேளாண்மையின் தொடக்க நிலை அல்லது தொடக்கக் காலம். இக்காலத்தில்தான் சீனர்கள் உலோகத்தாதிலிருந்து உலோகத்தை உருக்கியெடுத்து தனியே பிரிக்கும் உலோகங்களை உருக்கியெடுக்கும் நுட்பத்தை கண்டுபிடித்தனர். இதன் பின் வெண்கலத்தால் ஆன விவசாயக் கருவிகள் பயன்பாட்டில் வந்தன. நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் கட்டியமைக்கப்பட்டன. மொத்தத்தில் வேளாண்மை சீனாவில் முளைவிடத்தொடங்கி வளர்ந்தது.

மூன்றாவது கட்டம்:

சீன வரலாற்றின் வசந்தம் மற்றும் இலையுதிர்காலம் மற்றும் போரிடும் நாடுகள் காலம் ஆகியவற்றின் காலமான கி.மு. 770 முதல் 221ம் ஆண்டு வரையான காலம், சீன வேளாண்துறையின் வளர்ச்சியின் மூன்றாவது கட்டமாக கூறப்படுகிறது. இந்த காலக் கட்டத்தில்தான் முனைப்பான, மிகுந்த கவனத்துடன் கூடிய வேளாண்மை உருவானது. இரும்பின் உருக்கு நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனச் சமூகம், அரசியல், தொழில்நுட்பம், பண்பாடு ஆகியவை பெருமளவில் முன்னேற்றமடைந்தன. இரும்புக்கருவிகளும், விலங்குகளும் பயன்படுத்தப்பட்டதால் வேளாண் துறை பெரிதும் மேம்பட்டது.

நான்காவது கட்டம்:

ச்சின்,ஹான் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு வம்சக்காலங்கள் அடங்கிய கிமு 221 முதல் கிபி 598ம் ஆண்டு வரையான காலம், சீன வேளாண் வளர்ச்சியின் நான்காவது கட்டமாகும். இந்த கால கட்டத்தில் வட சீனாவில் முனைப்பான, மிகுந்த கவனத்துடன் கூடிய வேளாண் தொழில்நுட்பம் பக்குவம் அடைந்தது. உழுசால் எனப்படும் சால் ஓட்டுதல், கலப்பையால் உழுதல், நிலத்தை மட்டமாக்கல் அல்லது சமப்படுத்தல் போன்ற வேளாண் தொழில்நுட்பங்களும், பெரிய ரக மற்றும் நவீன வேளாண் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. புகழ்பெற்ற உழவியலாளர் ச்சியா சுஸ்ஹியே என்பவர் எழுதிய "மக்கள் நலத்திற்கான முக்கிய கலைகள்" (ச்சி மின் யாவ் ஷு) என்ற வேளாண் கலைக்களஞ்சியம் இக்காலத்தில் தான் தோன்றியது அல்லது உருவாக்கப்பட்டது. இந்த கலைக்களஞ்சியம், அதுவரை தோன்றிய அனைத்து வேளாண் சார் அனுபவங்களையும், முயற்சிகளையும் சுருக்கமாக பதிவு செய்திருந்தது.

ஐந்தாவது கட்டம்:

சுய், தங் மற்றும் சுங் முதல் யுவான் வம்சம் வரையான கிபி 581 முதல் 1368ம் ஆண்டு வரையான காலம், சீன வேளாண் வளர்ச்சியின் ஐந்தாவது கட்டம் எனப்படுகிறது. இதன்போது தீவிர, முனைப்பான நெல் வயல் பயிரிடல் தோன்றியது. சீனாவின் பொருளாதார மையம் வடக்கிலிருந்து தெற்கிற்கு மாறியது. இக்காலத்தில் நெற்பயிர் சாகுபடிக்கான பல்வேறு விவசாயக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு பரவத் தொடங்கின. பருத்தியும் படிப்படியாக பல பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது.

ஏராளமான வேளாண்மை தொடர்பான புத்தகங்கள் தோன்றின. நிலத்தை பயன்படுத்தும் வழிமுறைகளும் அதிகரித்தன. சீனாவின் வடக்கிலும், தெற்கிலும் வேளாண்மை கணிசமாக முன்னேறத் தொடங்கியது.

ஆறாவது கட்டம்:

முன்னேறிய கட்டமாக கூறப்படும் சீன வேளான் வளர்ச்சியின் ஆறாவது கட்டம் மிங் வம்சக்காலம் முதல் சிங் வம்சக்காலத்தின் நடுப்பகுதி வரையான காலத்தை குறிக்கிறது. கிபி 1368 முதல் 1840ம் ஆண்டு வரையான இக்காலத்தில், சீனாவின் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கும், ஒப்பீட்டளவில் அருகிக்கொண்டிருந்த நிலத்திற்கும் இடையிலான இடைவெளி முனைப்பானது. இதன் காரணம், முனைப்பான மிகுந்த கவனத்துடன் கூடிய வேளாண் வழிமுறைகள் மேலும் தீவிரமாயின, நவீனமாயின. அமெரிக்காவிலிருந்து புதிய பயிர்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. பல்வகை பயிர்களும், பன்முறை அறுவடையும் நாடு முழுதும் பரவலாகி, பரந்த வரவேற்பை பெற்றன.