• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-24 15:13:14    
சீனாவின் கால் பந்து சந்தை

cri

சீன ஆடவர் கால் பந்து அணி 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கால்பந்து உலக் கோப்பையில் நுழையவில்லை. ஆனால், சீனாவில் கால் பந்து விளையாட்டின மாபெரும் சந்தைக்கான உள்ளார்ந்த ஆற்றல் புகழ் பெற்ற உலக கால் பந்து லீக் போட்டிகளை ஈர்த்துள்ளது. இவ்வாண்டின் கோடைகாலத்தில், சீன கால்பந்து விளையாட்டு சந்தையை வளர்க்கும் திட்டத்தை ஜெர்மனி கால்பந்து முதல் தர லீக் போட்டி, இத்தாலி கால்பந்து லீக் போட்டி, ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டி ஆகிய புகழ் பெற்ற உலக முதல் நிலை கால்பந்து லீக் போட்டியின் அமைப்புக் குழுக்கள் அண்மையில் வெளியிட்டுள்ளன. இதில், தற்போதைய உலகில், தலைசிறந்த கால்பந்து லீக் போட்டியான ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியின் பரவல் நடவடிக்கைகளில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜெர்மனி ஆடவர் கால்பந்து அணி சீனாவுக்கு வந்து, சீன அணியுடன் நட்புப் போட்டியை நடத்தியது. சீனாவில், ஜெர்மனி கால்பந்து முதல் தர லீக் போட்டியை பரவலாக்குவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதனையடுத்து, இத்தாலி மேல்நிலை கால்பந்து போட்டியை 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாளிரவு 8 மணிக்கு, சீனத் தேசிய விளையாட்டரங்கான பறவை கூட்டில் நடத்துவதாக இத்தாலி கால்பந்து லீக் போட்டியின் அமைப்புக் குழு அறிவித்தது. தவிர, 4வது ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியின் ஆசிய கோப்பை பெய்சிங்கில் நடைபெறுவதாகவும், சீன கால்பந்து அணியுடன், நீண்டகால ஒத்துழைப்பை மேற்கொள்ளப் போவதாகவும் ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியின் அமைப்பு குழு அறிவித்தது.

திட்டப்படி, ஜூலை திங்கள் இறுதியில் பெய்சிங்கில், 4வது ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியின் ஆசிய கோப்பை நடைபெறும். ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டி நிறுவனத்துடன் சீன பெய்சிங் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக ஒத்துழைக்கும் என்று He Li Wan Shen நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Wang Hui தெரிவித்தார். 
ஜூலை 29 மற்றும் 31ம் நாட்களில் பெய்சிங் தொழிலாளர் விளையாட்டரங்கில் 4வது ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியின் ஆசிய கோப்பை நடைபெறும். Tottenham Hotspur, WestHam United, Hull City, பெய்சிங் கோஆங் ஆகிய 4 அணிகள் இக்கோப்பைக்கான போட்டியில் விளையாடும். சீன ரசிகர்கள் ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியை நேரடியாக கண்டுகளிப்பர் என்று அவர் கூறினார்.