இவ்வாண்டின் மார்ச் திங்கள் 27ம் நாள் முதல், ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான நுழைவுச்சீட்டுக்கள் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படத் துவங்கிய பின். ஜூன் திங்கள் 18ம் நாள் வரை, 17 கோடி நுழைவுச்சீட்டுகள், விற்பனை செய்யப்பட்டன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் நுழைவுச்சீட்டு மையத்தின் தலைவர் Chen Zhuofu 24நாள் இதைத் தெரிவித்தார்.
ஜூலை திங்கள் முதல் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நுழைவுச்சீட்டு விற்பனை இரண்டாவது கட்டத்தில் நுழையும். அப்போது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கான நுழைவுச்சீட்டு விற்பனையும் அதிகாரப்பூர்வமாகத் துவங்கும்.
|