முதலாவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் 1954ம் ஆண்டில் நடைபெற்றது. முதலாவது சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்பு சட்டம் இந்த கூட்டத்தொடரில் வகுக்கப்பட்டது. அரசின் அனைத்து அதிகாரங்களும் மக்களை சாரும் என்று இச்சட்டத்தில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் தேசிய மக்கள் பேரவை மற்றும் பல்வேறு நிலை மக்கள் பேரவைகளாகும். மக்கள் பேரவை அமைப்பு முறை தொடர்பாக அரசியல் அமைப்பு சட்டத்தில் வகுக்கப்பட்ட பல்வகை கோட்பாடுகளின் விதிகளை உத்தரவாதம் செய்யும் வகையில் முதலாவது தேசிய மக்கள் பேரவை கூட்டத்தொடரில் சீன அரசு நிறுவனங்கள் தொடர்பான 5 அமைப்புச் சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1954ம் ஆண்டு வகுக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிகளின் படி, தேசிய மக்கள் பேரவையின் பதவி காலம் 4 ஆண்டுகளாகும். அடி மட்ட நிலை மக்கள் பேரவையின் பதவி காலம் 2 ஆண்டுகளாகும். 1954ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சீன தேசிய மக்கள் பேரவை முதல் 1965ம் ஆண்டு நடைபெற்ற மூன்றவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் வரை, தேசிய மக்கள் பேரவை அடிப்படை திட்டத்தின் படி நடைபெற்றது. அடி மட்ட நிலை மக்கள் பேரவை கூட்டம் 1953ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரையான காலத்தில் 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. திட்டத்தின் படி அதுவும் நடைபெற்றது. ஆனால் 1966ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரையான பண்பாட்டுப் புரட்சிக் காலத்தில் தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை கடுமையாக சீர்குலைந்தது. தேசிய மக்கள் பேரவை கூட்டத் தொடர் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நடைபெற வில்லை. பல்வேறு உள்ளூர் நிலை மக்கள் பேரவைக் கூட்டத்தொடருக்கான தேர்தலும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற வில்லை. விளைவாக சீனாவின் சோஷிலிச ஜனநாயகம் சோஷிலிச சட்டக் கட்டுமானம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
|