• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-25 09:37:58    
நவீன மற்றும் பண்டைய தனிச்சிறப்புகளைக் கொண்ட சூ சோ

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு இன்னும் சுமார் பத்தரை திங்கள் காலம் உள்ளது. உலகப் பொருட்காட்சி நடைபெறும் காலத்தில் ஷாங்காய் மாநகருக்கு வந்து, சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில், பயணிகள் நல்ல தொரு திட்டத்தை வகுக்க வேண்டும். அப்படியானால் ஷாங்காயின் சுற்றுப்புற பிரதேசத்திலுள்ள அழகான காட்சி தலங்களைப் பார்ப்பது உறுதி. இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்காயின் அண்டை நகரான சூ சோ பற்றி கூறுகின்றோம்.


சியாங் சூ மாநிலத்தைச் சேர்ந்த சூ சோ, யாங்சி ஆற்றுக்கழிமுகத்தின் நடுப்பகுதியில் அமைந்தது. இந்நகரத்தின் வரையறையின் படி, பண்டைய நகரப்பிரதேசமும், புதுமையான தொழிற்துறை பிரதேசமும் பிரிக்கப்பட்டன. இதனால், பழைய நகரத்தைப் பேணிக்காப்பதோடு, புதுமையான தொழிற்துறை பிரதேசத்துக்கு போதியளவான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கலாம். இப்பொழுது, பண்டைய சூ சோ நகரப்பிரதேசத்தில், ஆறுகளும் பாதைகளும் இணைந்து நிலவுவதென்ற காட்சியையும், புகழ்பெற்ற வரலாற்றுத் தலங்களையும் பயணியர் காணலாம்.
சான்தாங் வீதி, சூ சோ நகரத்தில் மிகவும் புகழ்பெற்ற வீதியாக அழைக்கப்படுகிறது. வீதியின் இரண்டு பக்கங்களிலுள்ள கட்டிடங்கள் தனிச்சிறப்பியல்பு

கொண்டவைகளாக இருக்கின்றன. குறிப்பாக, இரவுநேரத்தில் பல சீன சிறப்பியல்பு கொண்ட சிவப்பு வண்ண அலங்கார விளக்குகளால் இவ்வீதி, அழகான காட்சியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பயணி ஹுவாங் என் லிங் செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்நகரம், ஓவியத்தைப் போன்றுள்ளது. மிகவும் அழகானது. பழைய நகரத்தில் வாழ்ந்து வரும் அனுபவத்தை உணர்ந்து கொள்கின்றேன். இந்நகரம் மிகவும் அருமையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சான்தாங் வீதியைப் பார்த்தப் பிறகு, ஒரு தேனீரகத்தில் தேய் ஹு ஏரியின் நீரைப் பயன்படுத்தி வழங்கிய தேனீரைக் குடித்து, இனிமையான சூ சோ இசை நாடகத்தைக் கேட்டு ரசிப்பதை அனுபவிக்கலாம்.

பெய்ஜிங்கிற்கு வந்தால், பெய்ஜிங் இசை நாடகத்தைப் பார்த்து மகிழ வேண்டும் என்பதைப் போன்று, சூ சோ நகரில், சூ சோ இசை நாடகத்தைக் கேட்டு ரசித்து இன்புறுவது உறுதி.
சூ சோ நகரத்துக்கு நாம் சென்றால், அதன் ஈர்ப்பு ஆற்றலை நன்றாக உணர்ந்து கொள்ளலாம். ஷாங்காய்யிலிருந்து சூ சோ நகருக்கு செல்வதற்கு, சீருந்து மூலம், சுமார் ஒரு மணி நேரம் தேவை. நல்ல சூரிய ஒளியில், சில நண்பர்களுடன் இணைந்து, சூ சோவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, உங்களை வரவேற்கின்றோம்.