கொரிய இன மக்கள், இங்கிதங்களுக்கும் பாரம்பரியத்தும் அதிக மதிப்பு அளிக்கின்றனர். அவர்களது விழாக்களின் போது, உணவு வகைகளை மிக அதிகமாகவும் சுவையாகவும் சமைக்கின்றனர். அனைத்து உணவுப்பொருட்களும், மிளகாய், முட்டை, கடற்பாசி, வெங்காயம் மிளகாய் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டன.
சந்திர நாட்காட்டியின்படி வசந்த விழா, விளக்கு விழா, 3வது திங்களின் 3ம் நாள், qingming விழா, இலையுதிர்கால விழா முதலியவை, கொரிய இனத்தின் முக்கிய விழாக்களாகும்.

சிறந்த உணவு வகைகளை விட, கொரிய இன மக்கள் பல்வகை விளையாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
குழந்தையின் 1 வயது கொண்டாட்டம், முதியவரின் 60வது பிறந்த நாள், 60வது திருமண நாள் ஆகிய 3 விழாக்களும் குடும்பத்தில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. குழந்தைகள் ஒரு வயதாகும் போது, கொரிய இன மக்கள் விருந்தினர்களுடன் கூட்டாக பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். 60வது பிறந்த நாள் கொண்டாட்டம், கொரிய மக்களின் இன்னொரு முக்கிய கொண்டாட்டமாகும். குழந்தைகள், உறவினர்கள், அண்டை வீட்டுக்காரர் முதலியோர், 60 வயதை எட்டிய முதியவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விழாக்களின் விருந்துகளில், மேசையில் முதலில் வாயில் ஒரு சிவப்பு மிளகாய் வைக்கப்பட்ட ஒரு கோழியை வைக்கின்றனர். உணவுப்பொருட்கள், அதிகமாக இருப்பதை விட, அழகாகவும் இருக்க வேண்டும். பல உணவுப்பொருட்கள், பறவை அல்லது விலங்குகளின் வடிவத்தில் சமைக்கப்படுகின்றன.
பண்டைக்காலம் முதல், முதியவரை மதிக்கின்ற பாரம்பரியத்தை கொரிய இன மக்கள் கடைபிடிக்கின்றனர். முதியோர், குடும்ப மற்றும் சமூகத்தில் மிக உயர்ந்த தகுநிலையில் இருக்கின்றனர். ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள், முதியோர் நாளாக கருதப்படுகின்றது. இந்நாளில் முதியோருக்கு மதிப்பு தெரிவிக்கின்றனர். தவிரவும், கொரிய இன மக்கள், குழந்தையை வளர்ப்பதில் அதிக முக்கியத்துவமளிக்கின்றனர்.

கொரிய இனத்தின் பண்பாட்டு மரபுச்செல்வத்தில், தேசிய இன சிறப்பு வாய்ந்த விளையாட்டுக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அவை, 300 வகைகளுக்கு மேலாகும். மற்போர், ஊஞ்சல், வலிமைப் போட்டி முதலியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

|