• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-26 10:00:33    
தென் ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோப்பை கால்பந்து போட்டி

cri
போக்குவரத்து நிர்வாக பணிகளில் தென் ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோப்பைக்கான கால்பந்து போட்டியின் அமைப்புக் குழு மேற்கொளும் முயற்சிகளால் மனநிறைவு அடைவதாக 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோப்பை கால்பந்து போட்டிகளை மேற்பார்வையிடும் உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் புலார் 19ம் நாள் தெரிவித்தார். 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ஆடவர் கால்பந்து உலக் கோப்பையின் போக்குவரத்து நிலைமை மனநிறைவு தருவதாக அமையும் என்று புலார் முழுமையாக நம்புவதாக தெரிவித்தார்.

பிரேசில், அமெரிக்கா, ஸ்பெயின், தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியின் ஆசிய கோப்பை நடைபெறுவதுடன், பெய்சிங் விளையாட்டு ஆணையம், பெய்சிங் கால்பந்து சங்கம் ஆகியவற்றுடன், ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டி நிறுவனம், குடியிருப்புப் பகுதி கால்பந்து வளர்ச்சி திட்டம், அடி மட்ட நிலை பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கும்

திட்டம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ளும். சீன கால்பந்து சங்கத்துடன் ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டி நிறுவனம் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் துவக்கம் இதுவாகும். எதிர்காலத்தில், நீண்டகால ஒத்துழைப்பை இருதரப்பும் மேற்கொள்ளும் என்று ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சந்தை அலுவலகத்தின் தலைமை கண்காணிப்பவர் Masters தெரிவித்தார்.

உண்மையான வணிக போட்டிப் ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டியின் ஆசிய கோப்பை அல்ல. ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டி நிறுவனத்துக்கு சீன கால்பந்து வளர்ச்சிக்கு துணைபுரிவது மற்றும் சீன கால்பந்து சங்கத்துடன் ஒத்துழைப்பை உருவாக்கும் வாய்ப்பை இது வழங்கும். எதிர்காலத்தில், இரு தரப்பும் மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு கோடைகாலத்தில், உலகின் முதல் நிலை தொழில் முறை கால்பந்து லீக் போட்டிகளான ஜெர்மனி கால்பந்து முதல் தர லீக் போட்டி, இத்தாலி கால்பந்து லீக் போட்டி, ஆங்கில கால்பந்து சிறப்பு லீக் போட்டி ஆகியவை சீன ரசிகர்களுக்கு மேலதிக திறமை வாய்ந்த போட்டிகளை வழங்கும்.