சூரிய ஒளியில் இன்னமும் நிலவும் கனவு
cri
Chen Yu அம்மையாரின் மலர் என்ற ஓவியங்களைக் கூர்ந்து பார்த்தால், சாதாரண ஓவியங்களில் இல்லாத ஒளிமயமான அழகை கண்டறியலாம். மை மற்றும் தூரிகையினால் வரையப்பட்ட மலர்கள், பெண்களின் மனதைப் போல், மென்மையாகவும் ஈரமுள்ளதாகவும் உள்ளதோடு, மகிழ்ச்சியையும் பலவீனத்தையும் வெளிப்படுத்துகின்றன. "இது மலராக இருந்தாலும் மலர் அல்ல" என்ற உணர்வு ரசிகர்களின் மனதில் ஏற்படலாம். பொது மக்களின் கருத்தில் கலைஞர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்திற்கு மாறாக, Chen Yu ஒழுங்கான முறையின்படி வாழ்க்கை நடத்துகிறார். குழந்தைப் பருவத்தில் ஓவியத்தை நேசித்த அவர், நுண்கலைக் கழகத்துக்குப் பதிலாக ஆசிரியர் பயற்சி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, இடைநிலைப் பள்ளியில் நுண்கலை பாட ஆசிரியையாக மாறினார். இளம் வயதில் திருமணமாகிய அவர், விபரந்தெரியாத நிலையில் தாயாக மாறினார். 1960ஆம் ஆண்டுகளில் பிறந்தவரின் முறையான வாழ்க்கை நிலையில் தான் அவர் உள்ளார். ஆனால், அத்தகைய அமைதியான மற்றும் விரிவான நாட்களில் திண்டாட்டத்தினால் அவர் தன்மதிப்பீடு செய்தார். கவிதை மற்றும் கட்டுரைகளில் Chen Yu தனது மனநிலையை வெளிப்படுத்தினார். பல படைப்புகளை எழுதிய அவர், தைவான் 4வது Liang Shiqiu இலக்கிய விருதையும், மத்திய நாளேட்டின் 7வது இலக்கிய விருதையும் பெற்றார். "சில சமயம் ஓவியம் வரைந்தேன். சாம்பல் மற்றும் நீல நிறத்தில் வேதனையுள்ள மனிதர்களையும் காற்றோட்டம் இல்லாத குகைகளையும் அதிகமாக வரைந்தேன்" என்று Chen Yu அம்மையார் கூறினார்.
2001ஆம் ஆண்டு, மத்திய நுண்கலைக் கழகத்தில் மேற்படிப்புக்காக கல்வி பயிலும் வாய்ப்பு Chen Yuவுக்கு கிடைத்தது. ஓவியம் மீதான பேரார்வம் பல ஆண்டுகளுக்குப் பின் அவருக்குள் மீண்டும் எழுந்தது. பெய்ஜிங்கிற்கு வர குடும்பத்தினரை விட்டு நீங்க வேண்டியிருந்தது. ஆனால் தன் விருப்பத்துடன் அவர் தெரிவு செய்தார். 2005ஆம் ஆண்டு பெய்ஜிங்கின் Song Zhuang என்ற இடத்துக்கு இடம்பெயர்ந்த Chen Yuவின் ஓவியப் படைப்பு துவங்கியது. அந்த ஆண்டு தொடக்கம், அவரது வாழ்க்கையாகவும் கலை படைப்பாகவும் மாறியுள்ளன. அவரது ஓவியம், மகிழ்ச்சியாகவும் ஒளிமயமாகவும் மாறியது. அப்போதுதான், மலர் என்ற ஓவியங்களையும் மலை மற்றும் நீர் என்ற ஓவியங்களையும் அவர் வரையத் துவங்கினார். "பார்ப்பதற்கு இவ்விரு வகை ஓவியங்களுக்கிடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. உண்மையில் அவை ஒத்த உளநலத் தேவை, அதாவது உற்சாகத்துக்கும் மனநிம்மதிக்கும் இடையில் நல்லிணக்கத்தை நாடும் தேவையிலிருந்து வருகின்றன" என்று Chen Yu விளக்கிக் கூறினார். முழு நேர ஓவியக் கலைஞரான Chen Yu தனது வாழ்க்கை பற்றி மனநிறைவு அடைகிறார்.
Chen Yuவின் இலக்கிய திறன் பொதுவாக எதிர்பார்க்கப்படுவதை விட சிறப்பானது. கவிதையை ஓவியத்துடன் இணைப்பது, இதர ஓவியக் கலைஞர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கும் தனிச்சிறப்பு ஆகும். அவரது கவிதைத் தொகுதிக்கும் ஓவியத் தொகுதிக்கும் "கனவைக் காயவைக்கும் இடம்" என்ற ஒரே பெயர் உண்டு. மனதின் பலவீனமான ஒளியை நன்றாக கையாள வேண்டும் என்று மனதில் கனவு இன்னமும் நிலவும் மக்களுக்கு இது நினைவூட்டுகிறது.
|
|