• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 10:32:03    
குவான் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி

cri
2010ம் ஆண்டு குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் "ஆசியா பாதை" என்ற பரப்புரையின் பிரதிநிதிக் குழுவும் நேபாள ஒலிம்பிக் அமைப்புக் குழுவும் 22ம் நாள் பேச்சுவார்த்தை நடத்தின. "ஆசியா பாதை" என்ற நடவடிக்கையில் நேபாள ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் Sherstha கையொப்பமிட்டுள்ளார். நேபாளத்திலுள்ள ஆசியாப் பாதை பரப்புரை நடவடிக்கை இனிதே முடிந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியை சீனாவின் குவான் சோ நகர் நட்ததுவதால் நேபாள மக்கள் மகிழ்ச்சி அடைவதாக Sherstha தெரிவித்தார். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்ற நம்பிக்கையை தெரிவித்த அவர், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றிபெறுவதற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நட்பை பகிர்வது, முழு ஆசிய மக்களுடன் இணைந்து, விளையாட்டால் மகிழ்வது ஆகியவை "ஆசியாப் பாதை" பரப்புரை நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். ஆசியாவின் பல தரப்பட்ட பண்பாட்டுப் பரிமாற்றத்தின் கூட்டு விழா குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். அடுத்த ஆண்டில், நேபாள மக்கள் சீனாவுக்கு வந்து, குவாங் சோ நகரின் பண்பாட்டை பற்றி அறிவதற்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கின்றோம் என்று "ஆசியா பாதை" என்ற பிரதிநிதிக் குழுவின் தலைவரும், குவாங் சோ ஆசிய விளையாட்டு அமைப்புக் குழுவின் பிரச்சார அலுவலகத்தின் துணைத் தலைவருமான Zeng Weiyu தெரிவித்தார்.

ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்பு குழுவும் ஆசியாப் பாதையை கூட்டாக ஏற்பாடு செய்தன. திட்டப்படி, 2008ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல், 2009ம் ஆண்டு நவம்பர் திங்கள் வரை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் 45 நாடுகளையும் பிரதேசங்களையும் கடந்து, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை பரவல் செய்வதற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
கமேரூணுக்கு உதவளிக்கும் வகையில், யவுண்டி நகரில் சீன அரசு கட்டிய பல செயல் திறனுடன் கூடிய பன்நோக்க அரங்கத்துக்கு கமேரூண் அரசு 19ம் நாள் திறப்பு விழா நடத்தியது. அத்துடன், நீண்டகாலமாக, பெருவாரியான உதவியையும் ஆதரவையும் சீனா கமேரூணுக்கு வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்தது. சீனாவின் நேர்மை, உயர்வான பயன், வாக்குறுதியை நிறைவேற்றுவது ஆகிய பண்புகளை அது வெகுவாகப் பாராட்டியது. கமேரூண்-சீன ஒத்துழைப்பில் இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கமேரூணிலுள்ள சீனாவின் பெரியரக உதவி திட்டப்பணிகளில் ஒன்று யவுண்டி பல் நோக்க அரங்கமாகும். யவுண்டியின் மையமான இடத்தில் இது அமைந்துள்ளது. தற்போது, கமேரூணில் இருக்கும் மாபெரும் பல செயல் திறனுடன் கூடிய பன்நோக்க விளையாட்டு அரங்கம் இதுவாகும். சர்வதேச போட்டிகளின் கோரிக்கையை இது நிறைவு செய்ய முடியும். அத்துடன், மக்களுக்கு விளையாட்டு உடற்பயிற்சி, உடல் கட்டுக் கோப்பு பயிற்சிகள் ஆகியவற்றை இது வழங்கும். அதிக பொது மக்கள் பங்கேற்கும், கலை நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள் ஆகியவையும் இங்கு நடைபெறலாம் என்று அறியப்படுகின்றது.