ஷாங்காய் உலக பொருட்காட்சியில் 35 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட 7 கோடி மக்கள் சுற்றுலா பயணம் மோற்கொள்வதென்ற குறிக்கோளை நனவாக்கும் வகையில் பன்முகங்களில் பரப்புரைப் பணி செவ்வனே நடைபெற வேண்டும் என்று சீன தேசிய சுற்றுலா ஆணையத்தின் தலைவர் சௌச்சிவே தெரிவித்தார். 29ம் நாள் ஷாங்காய் உலக பொருட்காட்சி பற்றிய பரப்புரைப் பணிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது சர்வதேச நிதி நெருக்கடி மோசமாகியுள்ளது. சளிக்காய்ச்சல் ஏ நச்சுயிரி தொற்று பரவியிருப்பது, உலக சர்வதேச சுற்றுலா சந்தை மந்த நிலையில் இருப்பது என்பன சீனா 7 கோடி மக்கள் ஷாங்காய் உலக பொருட்காட்சியை பார்வையிடுவதென்ற குறிக்கோளை நனவாக்குவதற்கு புதிய இன்னல் மற்றும் அறைகூவலை ஏற்பட்டுத்தியுள்ளன. ஆனால் திட்டமிடப்பட்ட இந்த இலக்கில் மாற்றம் ஏதும் இருக்காது என்று அவர் உறுதி கூறினார்.
|