• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 18:45:25    
என்னுடைய முதலாவது நான் சீன பயண அனுபவம்

cri

வணக்கம். திட்டமிட்டபடி ஜுன் திங்கள் 28 ஆம் நாள் பிற்பகல் 1.25 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டேன். விமான நிலையத்தில் விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன், பாண்டிச்சேரி ஜி.ராஜகோபால், என்.பாலக்குமார் மற்றும் உத்திரக்குடி சு.கலைவாணன் ராதிகா ஆகியோர் அன்புடன் வழியனுப்பி வைத்தனர். ஜுன் திங்கள் 29 ஆம் பாதுகாப்பான முறையில் சீன நேரப்படி காலை 6 மணிக்கு பெய்ஜிங் வந்தடைந்தேன். விமான நிலையத்தில் நண்பர் வாணி என்னை வரவேற்றார். சீன வானொலிக் கட்டிடம் அருகில் உள்ள சாங்பு விடுதியில் சற்று நேரம் இளைப்பாறினேன். பின்னர், கலைமணி என்னுடைய அறைக்கு வந்து என்னை உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே சீன வானொலியின் சார்பாக எனக்களிக்கப்பட்ட நண்பகல் விருந்தில் திரு.சுந்தரன் அவர்களும் கலந்து கொண்டார். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த விருந்திற்குப் பின் கிளிட்டஸ் இல்லத்திற்கும் சுந்தரன் இல்லத்திற்கும் சென்றேன். பின்பு சுந்தரனின் துணைவியார் காரை ஓட்டி வர, கிளிட்டஸ் மற்றும் சுந்தரன் ஆகியோருடன் சீன வானொலிக் கட்டிடத்திற்கு பிற்பகலில் வந்தேன்.

 தமிழ்ப்பிரிவுத் தலைவரான தி.கலையரசி அவர்களின் தலைமையிலான அனைத்துப் பணியாளர்களையும் சந்தித்துப் பேசி மகிழ்ந்தேன். பழைய நண்பரான திரு.தமிழ்ச்செல்வம் அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. என்னுடைய முதலாவது சீனப் பயணத்தை 1992 ஆம் ஆண்டில் மேற்கொண்டபோது, ரஷ்ய பாணியில் அமைந்த பழைய கட்டிடத்திற்கு சென்றேன். தற்போது நெடிதுயர்ந்த புதிய கட்டிடத்தின் 12வது மாடியில் தமிழ்ப்பிரிவின் அறையில் இன்றைய பிற்பகலை கழித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. நாளைக்காலை திபெத்தின் ல்ர்சா நகருக்கு புறப்படுவேன். இப்படிக்கு சீன வானொலி நிலையத்திலிருந்து எஸ்.செல்வம்.