2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங்கில் வெற்றிகரமாக நடைபெற்ற பின், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியின் போது, சுற்றுலாத் துறையிலான சீனாவின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல், மீண்டும் உலகத்துக்கு வெளிப்படும்.
ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா பற்றிய சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட சர்வதேசச் சுற்றுலாத் துறையினர் 29ம் நாள் இவ்வாறு தெரிவித்தனர்.
நிதி நெருக்கடி நிகழ்ந்துள்ள நிலைமையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலகப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், மேலை நாட்டவர் மேலும் சீனாவை அறிந்து கொண்டு, முன்பு உருவாக்கப்பட்ட சில தவறான கருத்துக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று உலகச் சுற்றுலா அமைப்பின் நிபுணர் Ignacio Fernandez Gonzaliz தெரிவித்தார்.
|