க்ளீட்டஸ் –எங்களோடு சேர்ந்து சுவையான சீன உணவு வகைகளின் தயாரிப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுங்கள். வாணி – இன்றைய நிகழ்ச்சியில் அவரையை முக்கியமாகக் கொண்ட உணவு வகை பற்றி கூறுகின்றோம். க்ளீட்டஸ் – இறைச்சி ஒன்றும் இடம்பெறாத உணவு வகை தான். சைவ உணவு பிடிக்கும் நேயர்கள் வீட்டில் இதைத் தயாரித்து ருசிப்பார்க்கலாம். வாணி – முதலில் தேவைப்படும் பொருட்கள் பற்றி கூறுகின்றேன். அவரை அரை கிலோ ரப்பர் அரிசி கால் கிலோ இஞ்சி, நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு ஆகியவை சிறிதளவு சமையல் மது 2 தேக்கரண்டி சோம்பு உரிய அளவு மிளகு ஒரு தேக்கரண்டி உணவு எண்ணெய் 200 மில்லி லிட்டர் க்ளீட்டஸ் – இஞ்சி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும், அப்படியா? வாணி – ஆமாம், சமையல் அறையில் முன் கூட்டியே தயார் செய்யுங்கள். க்ளீட்டஸ் – அவரையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அவற்றின் 2 பக்கங்களின் முனைகளை நீக்க வேண்டும், பிறகு, அவற்றை 5 சென்டி மீட்டர் அளவான துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். வாணி – அடுப்பின் மீது வாணலியை வைத்து, ரப்பர் அரிசியை வறுக்கவும். படிப்படியாக அது பொன் நிறமாக மாறிவிடும். அப்போது, அதை வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். க்ளீட்டஸ் – வறுக்கப்பட்ட ரப்பர் அரிசி ஆவிய பின், அவற்றை அரவை இயந்திரம் மூலம் மாவாக்க வேண்டும்.
வாணி – வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் சமையல் எண்ணெயை ஊற்றவும். 15 வினாடிக்குப் பின், அவரை துண்டுகளை இதில் கொட்டலாம். பெரிய சூட்டில் நன்றாக வதக்கவும். க்ளீட்டஸ் – வதக்கப்பட்ட அவரையை வாணலியிலிருந்து வெளியேற்றி மாவாக்கப்பட்ட ரப்பர் அரிசியுடன் சேர்க்கலாம். பிறகு உப்பு, இஞ்சி, வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு ஆகியவற்றை வாணலியில் கொட்டவும். சமையல் எண்ணெயையும் இதில் ஊற்றலாம். பாத்திரத்தில் அனைத்தையும் நன்றாக ஆற வேண்டும்.
வாணி – சுமார் 10 நிமிடங்களுக்குப் பின், ஆவி பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து, ரப்பர் அரிசி-அவரை கலைப்பை நன்றாக வேகச் செய்யுங்கள். சுமார் 30 நிமிட நேரம் தேவைப்படும். க்ளீட்டஸ் – நேயர்களே, இன்றைய அவரை உணவு வகை தயார். வாணி – நல்ல உணவு வகைகளை உரிய முறையில் சாப்பிடுவது, உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
க்ளீட்டஸ் – ஆமாம், தற்கால வாழ்க்கையில் நல்ல உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. வாணி – க்ளீட்டஸ், உணவு வகைகளிலான carbohydrate அளவை அதாவது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, வேறு எந்த உடல் நல ஊக்கப்பொருட்களும் கூடுதலாக சாப்பிடாத நிலையில், உங்களுக்கு மேலும் 15 ஆண்டு கால ஆயுள் நீட்டிக்கப்படலாமாம். நம்புகிறீர்களா? க்ளீட்டஸ் – ஓ, கொஞ்சம் விளக்கம் செய்யுங்கள்.
வாணி – இனிப்பு உணவு வகை மற்றும் முன்பே தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் சர்க்கரை அளவு அதிகம். அவற்றைச் சாப்பிட்டால், குறுகிய நேரத்தில், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு உயரும். அதன் விளைவாக ஏற்படும் insulin உயர்வு, பல தீரா நோய்கள் மற்றும் முதுமையடைதலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. க்ளீட்டஸ் – ஆகையால், சர்க்கரை குறைவாக கொண்ட உணவு வகைகளைக் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது. அவரை அதில் ஒரு நல்ல தேர்வாகும்.
|