ஷாங்காய் உலகக் கண்காட்சியின் நுழைவுச்சீட்டுக்கள்
cri
ஷாங்காய் உலகக் கண்காட்சியின் நுழைவுச்சீட்டுக்கள், ஜூலை முதல் நாள் தொடக்கம் தனிநபருக்கு விற்கப்பட துவங்கின., இவ்வாண்டின் டிசம்பர் 31ம் நாள் வரை இது விற்பனை செய்யப்படும். தனிநபருக்கு விற்கப்படும் நுழைவுச்சீட்டுக்கள், 2 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மே திங்களின் 3 நாட்கள் விடுமுறை, அக்டோபர் திங்களின் 7 நாட்கள் விடுமுறை, கண்காட்சி முடிவடையும் முந்தைய ஒரு வார நாட்கள் ஆகிய 17 நாட்களின் நுழைவுச்சீட்டுகள் விலை, 180 யுவானாகும். இதை தவிர ஏனைய நாட்களின் நுழைவுச்சீட்டுக்கள் விலை 140 யுவானாகும். நுழைவுச்சீட்டை விற்கின்ற 3000க்கு மேலான விற்பனை நிலையங்கள், இணையத் தளங்கள், தொலைப்பேசி ஆகியவை மூலம் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.
|
|