• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-01 16:12:27    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நுழைவுச் சீட்டு விற்பனை

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான நுழைவுச் சீட்டுடு ஜுலை முதல் நாள் தொடக்கம் உலகளவில் அனைவருக்கும் விற்கப்படத் துவங்கியது. முதல் கட்ட நுழைவுச் சீட்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்த முறை இணைய தளத்தின் மூலம் பணம் செலுத்தி சீட்டை வாங்கலாம். பொருட்காட்சி துவங்குவதற்கு முன் 40 விழுக்காட்டு சீட்டுகள் விற்கப்படும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர்  மதிப்பிட்டார்.



ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அடுத்த ஆண்டு மே திங்கள் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். இதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் திட்டப்படி நடைபெற்று வருகின்றன. இது பற்றி சீன ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவர் சென்சியேச்சின் கூறியதாவது ஜுலை திங்கள் முதல் நாள் தொடக்கம் இவ்வாண்டின் டிசம்பர் 31ம் நாள் வரை நுழைவுச் சீட்டுகள் விற்கப்படும். இந்த 6 திங்கள் நீடிக்கும் காலகட்டத்தில் தனிநபர் சீட்டுபகுதியில் குறிப்பிட்ட நாளுக்கான சீட்டு, பொதுவான சீட்டு ஆகிய இரண்டு வகை சீட்டுகள் உள்ளன. தவிரவும் குழு சீட்டுகள் அதேவேளையில் விற்கப்படும் என்று அவர் விவரித்தார்.

குறிப்பிட்ட நாள் சீட்டின் விற்பனை விலை 180 யுவானாகும். பொதுவான சீட்டுடின் விற்பனை விலை 140 யுவானாகும். இந்த சீட்டுடின் விற்பனை விலை பொருட்காட்சி நடைபெறும் நாட்களில் விற்கப்படும் சீட்டுடு விலையை விட 20 யுவான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இரண்டு மணி நேரத்தில் பெய்ஜிங்கில் ஒரு இணையத் தளத்தில் 10 சீட்டுகள் மட்டும் விற்கப்பட்டன. சீட்டு வாங்குவதற்கான வரிசை உருவாக வில்லை. இது பற்றி  வான்சோ சாலையில் அமைகின்ற சீன தபால் சேமிப்பு நிலையத்தின் பகல் அலுவலுக்கு பொறுப்பான யீ மியௌ மியௌ கூறியதாவது. காலை அலுவலகம் துவங்கியது முதல் இதுவரையான இரண்டு மணிநேரத்தில் பத்து சீட்டுகளை விற்பனை செய்தோம். மின்னணு வணிக அமைப்பு முறையில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான அட்டை மூலம் நுழைவுச் சீட்டு விற்பனை விவகாரங்களை கையாள்கின்றோம். அமைப்பு முறை மூலம் சீட்டு வாங்கும் தகவல் உள்ளே சேர்க்கப்பட்டதுடன் சீட்டு விற்பனை செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இருந்தாலும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தனிச்சிறப்பியல்பு ஆற்றல் பல நகர வாசிகளின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. பல நகர வாசிகள் சீட்டு விற்கப்படும் சாவடிகளுக்கு சென்றனர். பெய்ஜிங்கில் பட்ட மேற்படிப்பு பயில்கின்ற இளைஞர் ச்சான்யூன் இன்று காலை நுழைவுச் சீட்டு வாங்க விற்பனை சாவடிக்கு சென்றார். கோடைக்காலத்தில் தான் வாங்கிய சீட்டை குடும்பத்தினரிடம் காட்ட அவர் விரும்புகிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது. இன்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நுழைவுச் சீட்டு மக்களுக்கு விற்கப்படத் துவங்கியது. அதை வாங்கவே நான் வந்தேன். இந்த பொருட்காட்சி எமது நாட்டின் பொறுப்பில் நடைபெறும் உலக தன்மை வாய்ந்த பொருட்காட்சியாகும். என்னை இது மிகவும் ஈர்த்துள்ளது. இந்த பொருட்காட்சியில் பல முன்னேறிய காட்சி அரங்குகளையும் பொருட்களையும் கண்டுரசிக்கலாம் என்று அவர் கூறினார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தொடர்பான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஒழுங்கான முறையில் நடைபெற்று வருகின்றன. சீன அரங்கு, உலகப் பொருட்காட்சி மையம் போன்ற திட்டப்பணிகள் அடிப்படை வசதிகளை பொருத்தும் காலகட்டத்தில் உள்ளன. இதுவரை 239 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள உறுதிப்படுத்தியுள்ளன.