மஞ்சு இனம், சுறுசுறுப்பான, துணிவு மிகுந்த ஒரு இனமாகும். அது, சீன தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. மஞ்சு இனத்தின் சில விழாக்கள் ஹன் இன விழாக்களைப் போன்று இருந்தாலும் அவற்றின் பழக்கங்கள் வேறுபடுகின்றன.

tiancang விழா
சந்திர நாட்காட்டியின்படி முதல் திங்களின் 25ம் நாள், அறுவடைக்கு இறைவேண்டல் செய்கின்ற விழாவாகும். மஞ்சு இன மக்கள் சோள சோறுவைச் சமைத்து, சோளத்தின் காய்ந்த பதர்களால் பின்னப்பட்ட குதிரை அல்லது உழுவதற்கு பயன்படும் ஏரை அதில் வைக்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் இந்நடவடிக்கையை எளிதாக்கி, நேரடியாக காய்ந்த சோள பதர்களால் பின்னப்பட்ட ஏரை, தானியக் களஞ்சியத்தின் மேல் வைக்கிறார்ர்கள்.

சூரிய நாள்
சந்திர நாட்காட்டியின்படி 2வது திங்களின் முதல் நாளை, சூரியனின் பிறந்த நாளாக மஞ்சு இன மக்கள் கருதுகின்றனர். மாவினால் தயாரித்த வண்ணமான சிறிய கோழிகளைச் அவர்கள் சமைக்கின்றனர். சூரிய உதயத்தை வரவேற்பதாக இது பொருட்படுகிறது.

டிராகன் நாள்
சந்திர நாட்காட்டியின்படி 2வது திங்களின் 2ம் நாள், மஞ்சு இன மக்கள் புற்களையும் மரத்தையும் எரித்த கரியை ஒரு டிராகனின் வடிவம் போல் நிலத்தில் வளைந்து போடுகின்றனர். இது, டியாகனை வீட்டுக்கு அழைப்பதை பொருட்படுகிறது. இதன் மூலம், சீரான வானிலைக்காகவும் அமோக அறுவடைக்காகவும் இறை வேண்டல் செய்கின்றனர். இந்த நாளில், ஆண் குழந்தைகளின் தலைமுடி சிகையலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் அறிவு கூர்மையும் படிப்பில் சிறந்த சாதனைகளும் பெற, பெற்றோர் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். இந்த நாளில் திருமணம் செய்துள்ள மகளிர் தங்கள் தாய் வீட்டுக்கு அழைக்கப்பட்டு விருந்தளிக்கப்படுகின்றனர்.

Jieyuan நாள்
சந்திர நாட்காட்டியின்படி 4வது திங்களின் 8ம் நாள், மஞ்சு இன மக்கள் சமைத்த அவரைக்காய்களை ஒருவருக்கு ஒருவர் வழங்கி நீதியான நட்புறவு பெறும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகின்றனர். முதலில் முதியவருக்கு பின்னர் சிறுவருக்கு அவரைக்காய்களை வழங்குவது வழக்கம்.
|